« Index | Home | புலி வால் கல்யாணம் » | உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள் » | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்! » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல்! » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » 

05 December 2005 

ஆறு

ஆறுமுகன் பாடல்கள் சில

Image hosted by Photobucket.com


ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

(ஓராறு)






ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா - உலகில்
வேறு துணையில்லை வேல்முருகா

(ஆறுதல்)

மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால்
மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்

(ஆறுதல்)

இச்சையெனும் சக்தி வடிவான வள்வள்ளி
உலகை இயக்கும் சக்தி வடிவான தெய்வானை
பச்சை மயில் பரிவுடன் பக்திதரும் சக்தி
பகுத்தறியும் ஞான சக்தி வடிவேலா

(ஆறுதல்)

குன்றுதோறும் குடியிருக்கும் குமரா - உள்ளக்
கோயிலிலே குடியிருக்க வருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய்





ஆறுமோ ஆவல்
ஆறுமுகனை நேரில் காணாது

(ஆறுமோ)

ஏறு மயிலேறி குன்றுதோறும் நின்றாடியவன்
பெரும்புகழும் தெரிந்துமவன் பேரழகைப் பருகாமல்

(ஆறுமோ)

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ கூறுதற்கில்லாமல்
அற்புத தரிசனம் கற்பனை செய்தால் மட்டும்

(ஆறுமோ)



lyrics copied from: http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tdsa/tamilunicode/mur_idx.htm

அற்புதமான பாடல்கள் ஞானபீடம். மிகவும் ரசித்துப் படித்தேன்.


பாடுகிறேன் பேர்வழி என்று ஆடியோ ப்ளாகாக இல்லாமல் மனதுக்குள் பாடி மகிழ எழுத்தாக தந்ததற்கு நன்றி! நன்றி!! நன்றீ!!!


புலி வால் அரூபமானதற்கு ஏதும் சிறப்பு காரணம் உண்டோ??


நன்றி ராகவன்

தங்களின் கந்தனும் ஸ்கந்தனும் பதிவைப் படித்து, முருகப் பெருமானைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கப் பெற்றேன்; அந்தப் பதிவிற்கு சுட்டி இங்கே http://njcomments.blogspot.com
கொடுத்துள்ளேன்!

*** **** ***

நன்றி முகமூடி!

ஆறுமுகனுக்கு பாட்டு போட இன்றைய தேதி 6 என்பதும் ஒரு காரணம்! இதை விட்டால் வேறு பொருத்தமான நாள் கிடைக்குமா?!

முருகன் நான்கெழுத்து
முகமூடி நான்கெழுத்து

ரெண்டுமே 'மு'-வில் ஆரம்பம்!
ஆஹா!!


நானும் ஏதோ சூர்யாவின் ஆறு திரைப்படப் பாடல் பற்றிய பதிவாக்கும் என வந்தேன்..கிருபானந்த வாரியாரின் உரை எப்போது போடப்போகிறீர்கள்?


பாட்டெல்லாம் நல்லா எழுதியிருக்கீங்களே..!


// தங்களின் கந்தனும் ஸ்கந்தனும் பதிவைப் படித்து, முருகப் பெருமானைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கப் பெற்றேன்; அந்தப் பதிவிற்கு சுட்டி இங்கே http://njcomments.blogspot.com
கொடுத்துள்ளேன்! //

மிக்க நன்றி ஞானபீடம். உங்களுடைய ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.


முருகன் மீதான அருமையான பாடல் இட்டீர்கள்.
நன்றி ஞானபீடம்.

இன்னும் இரு முருகன் மீதான பாடலை நினைவு படுத்திவிட்டீர்கள்.
பாடிக்கொண்டிருக்கிறேன்


//நானும் ஏதோ சூர்யாவின் ஆறு திரைப்படப் பாடல் பற்றிய பதிவாக்கும் என வந்தேன்..கிருபானந்த வாரியாரின் உரை எப்போது போடப்போகிறீர்கள்? // - theevu

விரைவில் வரலாம், வராமலும் போகலாம்! எல்லாம் வானிலை அறிக்கை போல :-)))

**** **** **** ***
//பாட்டெல்லாம் நல்லா எழுதியிருக்கீங்களே..! // - தருமி

மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய சீனியர் வலைப்பதிவர் தருமி அவர்களே!
நானா எழுதலிங்க, மண்டபத்துல எழுதி வெச்சிருந்தாங்க, அப்டியே சுட்டு போட்டுட்டேன்!

அதோட லிங்க் கூட கீழ போட்ருக்கேன்
;-)


**** *** ****

//உங்களுடைய ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. // - ராகவன்.G

நன்றி ராகவன்

*** *** ***

//இன்னும் இரு முருகன் மீதான பாடலை நினைவு படுத்திவிட்டீர்கள்.
பாடிக்கொண்டிருக்கிறேன்// - மதுமிதா

கொஞ்சம் சத்தமாகப் பாடினால் நாங்கள் எல்லோருமே உங்களின் தேமதுரக் குரலைக் கேட்டு மகிழ்வோமே!! முயலுங்களேன் ப்ளீஸ்!
:-)


**** **** ***

அறுபடை வீடு கொண்ட திருமுருகன் எல்லோருக்கும் அருள் பாலிக்க வேண்டுகிறேன்!

***** *** ***


ஆஹா! இதுவல்லவோ பதிவு!

என்ன ஓய் ஏஜண்ட்டு! எழுமிச்சைப்பழம் வாங்கினீரா! சமீபத்திய பதிவுகளைப்படித்தால் ஏதோ உமக்கு தெளிந்தமாதிரி இருக்கு! :)

(ச்சே... இந்த ஸ்மைலிய போடாம ஒரு உண்மையச்சொல்ல முடியுதா இந்த வலைல.... )

முருகன் பாடல்கள் அருமை.. ம்ம்ம் அந்த காலத்துல எங்க வீட்டுல இந்த மொத பாட்டு ஓட்டை டேப்ரிக்கார்டர்ல ஒரு நாளைக்கு 4 முறையாவது தேயும்! இப்போ mp3 இருந்தும் அது "வடுமாங்கா ஊருதுங்கோ"ன்னு ஒளரிக்கிட்டு இருக்கு...


ஆறுவது சினம்
கூறுவது தமிழ்
அறியாத பீடமா நீர்?

(ஆறுவது)

பக்திப் பழரசம் பிழிந்து விட்டீர்!

அப்பிடியே பத்தாம் திகதியில் ராவணர் துதிப் பாடல்களைப் போட்டுவிட்டால் நீரும் செக்கூலரிஸ்டுதான்.

ஹம்மிங்: ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-)


//எழுமிச்சைப்பழம் வாங்கினீரா! // - இளவஞ்சி

எலுமிச்சை மட்டுமல்ல ஓய், ஆரஞ்சும் சேத்தே வாங்கினேன்; மழைக்காலம் சளி பிடிக்காம இருக்க எதிர்ப்பு சக்தி இந்தப் பழங்கள்-ல இருக்கறதா படிச்சதா ஞாபகம்; அதான் வாங்கி சாப்ட்டேன், ஒரு மாதிரிதான் இருக்கு!

:-)

ஸ்மைலி போட்டாலும் சிரிக்கனும்!
ஸ்மைலி போடாட்டாலும் சிரிக்காம இருக்கக் கூடாது!



**** **** ****

குசும்பரே இராவணன் துதிப்பாடல்கள் என்றால்,

இராவணன் சிவபக்தியால் சிவனைப்பாடிய பாடல்களைத்தானே சொல்கிறீர்! கொடும்; போடுகிறேன்!!

எந்த மாயையும் என் கண்ணை மறைக்க அனுமதிப்பதில்லை!


1.மண்ணாணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

2.மயிலாக நான் மாற வேண்டும்.

ரெண்டு தான் அப்ப
இப்ப எழுதறப்ப பேவரேட் பாடல்

3.பச்சை மயில் வாகனனே
சிவபால சுப்ரமண்யனே வா
இச்சை எல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே.

போதும் மேலும் மேலும் பாடல்.....

பாடுறது பெருசில்லைய்யா
பின்னாடி பஞ்சகல்யாணிங்க குரல் குடுத்தா என்ன பண்றது?

தமிழ்மணத்திலிருந்து ஆதரவு வேணாமா:-)


//பாடுறது பெருசில்லைய்யா
பின்னாடி பஞ்சகல்யாணிங்க குரல் குடுத்தா என்ன பண்றது?//
- மதுமிதா

இங்கே உள்ள முருகன் பாடல்களைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நான் குரல் கொடுக்க (கர்ஜிக்க!) மாட்டேன் என்று வேண்டுமானால் உறுதி கொடுக்கலாம்! மற்றவர்களைப் பற்றி என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை!!

:-)))


நன்றி
ஆறுமுகன் அருளால் நல்லாயிருங்க ஞானபீடம்


thanks for the blessing!


Post a comment Home Index