யூஸ்லெஸ்

ஜன்னலுக்கு வெளியே
கல்மீது தலைசாய்த்து
படுத்திருக்கும் நாய்
நன்றியோடு அவளை நோக்கி
ஈரமான விழிகளோடும்
நடுங்கும் உடலோடும்.
மொட்டை மாடி குளிரில்
மெல்லிய தென்றல் வந்து
வருடும் சுகத்தை மறந்து
அவளையே பார்த்திருக்கும்.
எழுதுகிறாள் ஒரு கடிதம்
பேசுகிறாள் அந்த நாயிடம்
எண்ணுகிறாள் தன் எழுத்தை
அவளும் அப்படித்தானோ?
வைத்தாளே நம்பிக்கை வீணாய்!
முருகா,
என்னைய ஏன் இன்னும் இந்த மாதிரி ********** பதிலெழுதச் சொல்றன்னு தெரியலியே! சீக்கிரமே நல்ல வழி காட்டுப்பா!
Posted by
rv |
Sun Jan 08, 02:06:00 pm (IST)
யூஸ்லெஸ் - பொருத்தமான பெயர் (பதிவுக்கா கவிதைக்கான்னு யாருப்பா அங்க நாரதர் வேல பாக்குறது??)
ஞானபீடம் வாழ்க!
Posted by
முகமூடி |
Sun Jan 08, 03:53:00 pm (IST)
ராம்ஸ், அதே முருகன், முத்துக் குமரன் தானய்யா என்னயும் இந்த 'யூஸ்லெஸ்' எழுத வெச்சான்!
கந்தன் கருணையே கருணை!!
முகமூடி, எட்டு பொருத்தமும் பாத்துத்தான் நாங்க பேர் வெச்சோம்!
நாரதர் வேலைக்கு ஆட்கள் தேவை!!
- NJ
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jan 08, 07:50:00 pm (IST)
"ஞானபீடம் வாழ்க!" என்று நான் சொல்லவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது... என் கருத்து எடிட் செய்யப்பட்டால் அப்புறம் உமது ப்ளொக் வெளியீட்டு விழாவில் உண்டு இல்லை என்றாக்குவேன் என்பதை இங்கே வன்முறையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
Posted by
முகமூடி |
Sun Jan 08, 10:31:00 pm (IST)
போலி பின்னூட்டம் இடுவது எப்படி என்று பதிவு போட்ட நீரே, கமெண்ட் எடிட் செய்வதற்கும் ஒரு பதிவு போடும்!
பலருக்கு சில வகைகளில் உதவலாம்!!
;-)
=====
முகமூடியின் கமெண்ட்-டை எடிட் செய்து அதில் "ஞானபீடம் வாழ்க" என்று வாழ்த்தியது அடியேன் தான் என்று சொல்லிக்கிடறேன்!!!
Posted by
ஏஜண்ட் NJ |
Mon Jan 09, 02:01:00 am (IST)
//...அப்புறம் உமது ப்ளொக் வெளியீட்டு விழாவில் உண்டு இல்லை என்றாக்குவேன்... // - முகமூடி
என்ன செய்வீர், துப்பட்டாவைக் கழற்றி சுத்துவீரோ?!?!?!?!?!
:smiley:
:-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Mon Jan 09, 02:03:00 am (IST)