« Index | Home | இது அது பற்றியல்ல » | காதலின் திருவிழா - Rain » | கிண்ணத்தில் வீசிய புயல் » | குதம்பைச் சித்தர் பாடல்கள் » | ஸம்போ... ஸிவஸம்போ... » | பொங்கல் » | பட்டை » | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » 

29 January 2006 

காப்பி - coffee


காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இசை அமுது

புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாதமாதிரியும் இருக்கு..

இருங்க ஏஜண்ட்டு.. சூடா ஒரு காபி குடிச்சிட்டு சுறுசுறுப்பா வாரேன்!


இளவஞ்சி,

உமக்கு இலக்கியம் தெரியுமா?

காப்பி குடிக்கவும் இலக்கியம் தேவையான்னு கேக்கப்படாது!!

ஆழக்குத்தெழுத்துச் சித்தனிடம் இலக்கியம் பயின்று, பிறகு படிக்கவும்!

:-)))))


//சுவையே இலாத
காப்பி எதற்காக?//

appu nalla coffee kudichathu illaya appu?


//appu nalla coffee kudichathu illaya appu? //

What to do, I drink coffee that my wife prepares! so i just shared thoughts of புரட்சி கவிஞர் பாரதிதாசன் !!!


ஏனெனில்
காப்பி குடிப்பதுவும்
குற்றமென்றுரைக்கும்
மனமின்னும்
வாய்க்கவில்லையே
அதற்காக


முகமூடி,

1. தங்களுக்கு நன்றாக கவிதை எழுத வருகிறது!

2. தங்களுக்கு சீரிய(ஸ்) சிந்தனை உள்ளது!!

3. முக்கியமாக இலக்கியத்தைக் கரைத்துக் (காப்பியாக) குடித்திருக்கிறீர்கள்!!

4. மிக மிக முக்கியமாக, இலக்கியத் திறனாய்வு... ஆஹா... ஓஹோ...

என்பதை நான் புரிந்து கொள்கிறேன்!!!

smiley goes here!
:-) :-)) :-)))


காப்பி - COPY

"காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் பேனாவுடன் மை இருக்கையில்
காப்பி எதற்காக ?

சொந்த கம்பன் வள்ளுவ தந்த
தெம்பு மிக்க தென்னாட்டில்
வெந்த காப்பி எதற்காக ?

ஆட்பட்டாய் இண்டெர்நெட்டுக்கே
அடிமை வியந்தாய் ஹாலிவுட் படங்களுக்கே
பூப்போட்ட பிரிட்டினி, மடோனா பல்லிளித்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
உள்ளூர் பிகர்கள் இருக்க சிலிக்கான் பெற்ற
அழகே இல்லாத வெளிநாட்டு பிகர்
படங்களின் காப்பி எதற்காக?"

- by chinnavan
http://chinnavan.blogspot.com/2006/01/copy.html


இணைப்பு கொடுத்த இணைய உலக முடி சூடா இலக்கியவாதி அண்ணன் ஞான்ஸ்க்கு

நன்றி! நன்றி!! நன்றி!!!


//இணைய உலக முடி சூடா இலக்கியவாதி அண்ணன் ஞான்ஸ்// - chinnavan.

Are you sure chinnavan, there is no typo' in your above comment!!

say not later a typo' like this,
இலக்கியவியாதி!

:-))


அல்லாரும் கமெண்ட் பொட்டிய அடை கோழி மாதிரி காவல் காக்குறாங்கோ... என்னாபா நடக்குது?

காப்பியோ COPY'யோ நல்லாயிருந்தா சரிதாம்பா...

புது ப்ளாக் மாடல் போட்டிருக்கேளே... வாஸ்து எல்லாம் பாத்துதானே...?


to kusumban:

//என்னாபா நடக்குது?//

obey order with smile!!! - (NCC- ல சொல்லிக்குடுத்தாங்கோ!)


//புது ப்ளாக் மாடல் போட்டிருக்கேளே... வாஸ்து எல்லாம் பாத்துதானே...? //

No வாஸ்து! Only டேஸ்ட்டு!!

:-)

==========
தமிழ் வலைப்பூ உலகின் குசும்புச் சக்கரவர்த்தி visit KUSUMBAN's blog


//ஏனெனில்
காப்பி குடிப்பதுவும்
குற்றமென்றுரைக்கும்
மனமின்னும்
வாய்க்கவில்லையே
அதற்காக//
- Mugamoodi

Super, but can't understand.
can you please explain.

- SR


//ஏனெனில்
காப்பி குடிப்பதுவும்
குற்றமென்றுரைக்கும்
மனமின்னும்
வாய்க்கவில்லையே
அதற்காக//

எங்கே பார்த்தாலும் கழிசடை காபிகள்...
காபி போல் தோற்றத்தில் எது எதுவோ...
அதையும் குடித்து ஆர்பரிக்க ஆட்கள் உண்டு
எடுப்பார் கைப்பிள்ளைகள் எதை ஊட்டினாலும்
குடிப்பது மட்டுமல்ல.... குமட்டியும் விடுகின்றன.

ஆமா., முகமூடி அலட்சியமா அள்ளி வீசிட்டு., அலுங்காம குடிமுழுகிப் போகாதுன்னு சொல்லிட்டு இங்க வந்து (இல்ல இதுவும் உங்க இடந்தானா?., கவித படிச்சுகிட்டு இருக்கிறப்பு?., விளக்கத்தை வந்து சொல்லு சாமி.


அப்டிபோடு, இந்த பதிவு வந்தது எப்போ, நீங்க கேள்வி கேட்டது எப்போ? எதுக்கு எப்ப பாத்தாலும் சந்தேகத்தோடயும் ஆத்திரத்தோடயும் இருக்கீங்க. அதான் பதில் சொல்றேன்னு சொல்லியிருந்தேனில்ல...

சரி பதில் சொல்லியாச்சி. இங்க போயி படிச்சிகிங்க.


Post a comment Home Index