« Index | Home | வானிலை அறிவிப்பு » | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » | மருதமலை மாமணி » 

22 May 2006 

நாயின் பேர் அப்பாய்



1.28 நாய்

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;

என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போ என்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!

என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்

என்றன் நாயின் பேர் அப்பாய்...

=== *** === *** === *** ===

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "இசை அமுது"

e-text from: http://www.infitt.org/pmadurai/mp093.html

ஞானபீடம் சார்,
இன்னக்கி என்ன நாய்கள் தினமா சார்?
இன்று நான் படிக்கும் 5வது நாய் பற்றிய பதிவு. கொஞ்சம் சொல்லுங்களேன்.


அடிப்பொளி சேட்டா!!


அடடா ஞான்ஸ்,

இதை முன்னாடியே போட்டிருக்கக்கூடாதா? நாயின் அருமை தெரியாமல் இன்னைக்கு ரொம்பக்கேவலமா அதைப்பத்தி எழுதிட்டேன்! :)))


அப்படியே. "நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்று யாராவது ஒரு பதிவு போடுங்கப்பூ


சிவமுருகன் சார்,

இன்னிக்கி நாய்கள் தினமா என்று தெரியவில்லை என்றபோதிலும் அன்பே சிவம் படத்தில் மாதவன் கமலிடம் சொன்ன டயலாக் ஒன்று மட்டும் நினைவுக்கு வருகிறது!

மற்றபடி ச்சும்மா... ஒரு 'டைம் பாஸ்'க்குதான் இதெல்லாம்
:-)))


This comment has been removed by a blog administrator.


//அடிப்பொளி சேட்டா!! // - 'தல' ராசா

நன்னி...
நமஸ்கா.....ரம்!
;-)


//நாயின் அருமை தெரியாமல் இன்னைக்கு ரொம்பக்கேவலமா அதைப்பத்தி எழுதிட்டேன்! :))) // - இளவஞ்சி

ஓ.. அப்படியா

:-)


//நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்று யாராவது ஒரு பதிவு போடுங்கப்பூ // - உஷா

ஏங்க ஒங்களுக்கு இவ்ளோ பொறாம நாய் வாலு மேல;

அது எவ்ளோ அழகா வளைஞ்சி நெளிஞ்சி இருக்கு; அத்தப் போயி நிமுத்தனும்னு நெனக்கிறீங்க; அப்டீன்னா இது கடவுள் பண்ண manufacturing defect-ன்னு சொல்றீங்க போல!

கொஞ்சம் நெனச்சுப் பாருங்க நாய் வால் நேரா வளையாம இருந்துச்சுன்னா அது ஒக்காரனும்னா எவ்ளோ செரமப்படும்!!

இது தெரியாம... எதோ நிமுத்தனும்னு கெளம்பிட்டீங்க
:-)))


40 vayasukku mela naai gunam varumam.. yaar sonnanga.. :)

sowkiyama ஞான்S


//...yaar sonnanga.. :)//- VM

யாராச்சும் ரொம்ப நல்லவுங்க, பெரியவுங்க சொல்லிருப்பாங்க!

பரம சுகம்!

மெய்யாலுமே VM வலைப்பக்கம் இவ்ளோ காலம் வராமயா இருந்தீங்க, நான் நம்பமாட்டேன்!!
;-)


Post a comment Home Index