ரிட்டர்ன் ஆப் த...
விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தேன்;
கல்யாண நாள் வந்தது; கோவிலுக்குச் சென்றோம்;
ஒரு பத்து நாள் எங்க ஊருல இருந்தோம், இன்னொரு பத்து நாள் மாமனார் வீட்ல இருந்தோம்.
பெரிய தங்கையின் மகளுக்கு காதுகுத்து வைத்தார்கள்; எல்லோரும் சென்றோம்; (குழியும் குழி சார்ந்த இடமும் ரோடு என்றார்கள்! அதன்வழியேதான் பயணித்தோம்); தாய்மாமன் என்பதால் காதுக்கும் கழுத்துக்கும் நகை செய்தேன்;
ஊரில் மழை பெய்தது; குழந்தை எப்போதும் வெளியே வாசலில் விளையாடியது;காய்ச்சல் வந்தது; ஊசி போட்டு மாத்திரை கொடுக்க சரியானது;
எங்கள் ஆடு ஒன்று குட்டி போட்டது; தலைச்சன் போகம் ஒரு குட்டிதான் போடும் என்றார்கள்; ஒரு குட்டி போட்டு கொஞ்ச நேரம் கழித்து இரண்டாவது குட்டியும் போட்டது; இரண்டுமே கெடாக்குட்டிகள்!; பிறந்த சிறிது நேரத்திலேயே குட்டிகள் எழுந்து தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்தன; "ஏன்ணே, இப்டி ஆட்டுக்குட்டி மாரியே குழந்தைகளும் பொறந்தோன்ன நடந்தா, எப்டி இருக்கும்"? என சிறிய தங்கை கேட்க, "அட, அதவுடு, இந்த ஆட்டுக்குட்டிங்க, ஆட்டோட வயத்துக்குள்ள இருக்கும்போதே நடந்திருந்தா ஆட்டுக்கு எப்டி இருந்திருக்கும்"-னு கேட்டு தம்பி கெக்கே பிக்கேவென்று சிரித்தான்.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் இல்லாமல், விடுமுறை முடிந்தது; திரும்ப வந்தாயிற்று.
*** *** *** *** ***
தமிழ், மயிர், உயிர், டவுசர் போட்ட சானியா, குஷ்பூ, கற்பூ, கலாச்சாரம், வாத்து, வி.காந்த்-தே.மு.தி.க...
ம்... கடிகாரம் ஓடுது... காத்து வீசுது! அவ்ளோதான்!!!