« Index | Home | Arya & Dravid » | முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன் » | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » | மருதமலை மாமணி » | கலைந்து போகும் கோலங்கள் » 

21 May 2006 

வானிலை அறிவிப்பு



மு
தி
ர்


சோ
லை





வானம் மேகமூட்டத்துடனோ அல்லது பறவை கூட்டத்துடனோ காணப்படலாம்!

மெல்லிய தூறலில் ஆரம்பித்து ஆலங்கட்டி மழை வரை பெய்க்கலாம் இல்லாட்டி பொய்க்கலாம்!!

இடி மின்னல் இத்யாதிகள் தோண்றலாம்; தோண்றாமலும் போகலாம்!!!

காற்றுடன் கூடிய பலத்த மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன; தோற்றப் பிழையாகக் கூட இருக்கலாம்!!!!

இடி இடிக்கும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று சொன்னால் காது செவிடாகும் வாய்ப்பு இருக்காது என்று சொல்வார்கள்; ஆனால் திறந்த வாய்க்குள் இடி புகுந்து வாய் ரிப்பேர் ஆகலாம்!!

தலைச்சன் பிள்ளை தலையில் இடி இறங்கும் என்று ஊர்ப்பக்கம் சொல்லக் கேள்வி! அப்படி ஏதும் விழுந்தால் கவலைப்படாமல் எடுத்து ஓரமாக குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நடையைக் கட்டவும்! அந்த இடத்திலேயே நிக்க வேண்டாம்; மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கவும்!!

நனையாதே, மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பார்கள்; வெயில் காலத்தில் கூடத்தான் வேர்வைச் சளி பிடிக்கிறது. எல்லாவற்றையும் அனுபவி என்று சொல்வார்கள்; மழை வெயில் காய்ச்சல் தலைவலி எல்லாவற்றையுமே அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

எரிந்து விழும் நச்சத்திரத்தை பார்க்கவேண்டாம்; ஞாபக சக்தி குறைந்துவிடும் என்பார்கள்; ஒருவேளை பார்த்துவிட்டால், ஒன்றும் பிரச்சினை இல்லை; வல்லாரை தூதுவளை போன்ற மூலிகை மருந்துகள் கிடைக்கும், வாங்கிச்சாப்பிட்டு ஞாபக சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம்!
மறக்க வேண்டாம், மறதி இறைவன் கொடுத்த வரம்!

வாங்கையா, வாங்க! நீரும் வந்து குட்டைய கொழப்பும். உங்களைத்தான் ஆளக்காணமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன் :-)


யப்பா சாமி, ஊர் பக்கம் ரொம்ப வெய்யிலா? பாத்து. வெளிய போகும்போது குடை தொப்பி எதாவது எடுத்துக்கிட்டு போங்க.


//...குட்டைய கொழப்பும்...// - உஷா

குட்டை குழ(ப்)ம்பினால் தான், தெளிவு கிடைக்கும் என்று சொல்வார்கள்! அதற்காக நெட்டை குழம்பாதா, இல்லை குழம்பினால் தெளிவுதான் கிடைக்காதா என்று கேட்கலாமா!!
:-)
குட்டை நெட்டை என்று நீங்கள் பிரிவைனைவாதத்தை முன்வைத்தால் என்னிடம் அவைபற்றி தர்க்கம் செய்ய இப்போதைக்கு ஒன்றுமில்லை என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்!


//..குடை தொப்பி... // - கொத்ஸ்

நான் என்வழியில் குடை பிடித்துக் கொண்டு போனாலும் கூட, அர்த்த ராத்திரியையும் அற்பனையும் சேர்த்த சொலவடையை உதிர்த்து வடைகறி செய்ய உத்தேசமா?!
:-)


சொல்ல வர்ற விசயம் புரியலான்னாலும், நமீதா நல்லா இருக்குதுங்க.


அனைத்து சீதோசண நிலைக்கும் ஏற்ற வானிலை அறிக்கை.

வானிலை அறிக்கை படியே..

(படம் = நோ கமென்ட்ஸ் :-))

இப்படிக்கு
'அமுக்கி' வாசிக்கும் கார்த்திக்


கரெக்டுங்க மகேஸ்.. நமீதாவும், அவங்க கையில் இருக்கும் ஆரெஞ்சு பழமும் (ஆரஞ்சு தானே அது??) ஆப்பிளும்!! ஆகா.. சாப்பாடு சாப்பிட நேரமாச்சு...

ஏய்யா ஏஜண்டு, இந்தப் படத்தப் போட்டுட்டு, இடி மழை மின்னலுங்கிறீரு!!


//விசயம் புரியலான்னாலும் நமீதா நல்லா இருக்குதுங்க. // -மகேஸ்!

பரவால்ல சாய்ஸ்ல வுட்டுடுங்க!
:-)

=============

//'அமுக்கி' வாசிக்கும் // - கார்த்திக்

காலம் இப்டியே இருந்துவிடாது... கவலைப்படவேண்டாம்!
விரைவில் சூறாவளி சுற்றியடிக்கலாம்!!

===========

//ஏய்யா ஏஜண்டு, இந்தப் படத்தப் போட்டுட்டு, இடி.. // - பொன்ஸ்

பாருங்க... நா சொல்லாதத சொல்லி என்னய வம்புல மாட்டிவிடாதீங்க!

இடி மின்னல் பத்தி எழுதுனா... நா என்னமோ நமீதாவ இடி அப்டீன்னு சொல்றதா ஒரு அர்த்தம் கொடுக்கறீங்க; இதெல்லாம் நல்லால்ல.. ஆமா!
:-)


// வல்லாரை தூதுவளை போன்ற மூலிகை மருந்துகள் கிடைக்கும் //

இல்லையெனில் இருக்கவே இருக்கு சிட்டுக்குருவி லேகியம். ஆனா பத்தியத்த ஒழுங்கா கடைபிடிக்கணும். மருத்துவரு 1 குளிகை வீதம் 30 நாள் சாப்பிட சொன்னா, கெரகம் சீக்கிரம் தாதுபுஷ்டி கிடக்கணுமின்னு 30 குளிகையையும் ஒரே நாள்ல சாப்பிட கூடாது. அப்புறம் மண்டை சுத்தமா காலியாகிடும். எல்லாரும் மூளை கெட்ட ஜென்மமேன்னு திட்டுவாங்க.


//30 குளிகையையும் ஒரே நாள்ல சாப்பிட கூடாது... மூளை கெட்ட ஜென்மமேன்னு திட்டுவாங்க// - முகமூடி

ஒரே நாள்ல 30 குளிகை சாப்ட்டா மூளையாய்யா கெட்டுப்போகும்!
;-)


=============

//'நமீதா காய்ச்சல்' //

நல்ல வேளை... காய்ச்சலா, நா
பாய்ச்சல்-ன்னு சொன்னீங்களோன்னு நெனச்சிட்டேன்!
;-)


பதிஞ்சப்புறம் சேத்தது:

"பழமுதிர் சோலை"

- NJ


"ஆழக்குத்தெழுத்துச் சித்தகுரு" ஞானபீடம் வாழ்க!

- பி.கே. சிவகுமார்


////ஏய்யா ஏஜண்டு, இந்தப் படத்தப் போட்டுட்டு, இடி.. // - பொன்ஸ்
பாருங்க... நா சொல்லாதத சொல்லி என்னய வம்புல மாட்டிவிடாதீங்க!
இடி மின்னல் பத்தி எழுதுனா... நா என்னமோ நமீதாவ இடி அப்டீன்னு சொல்றதா ஒரு அர்த்தம் கொடுக்கறீங்க; இதெல்லாம் நல்லால்ல.. ஆமா!:-) //

உள்குத்து, வெளிக்குத்து பதிவா படிச்சி ரொம்ப குழம்பிப் போயிருக்கீங்க ஏஜென்ட்!! இந்த இடி, வினையின் காரணமாக வந்த பெயர்ச்சொல் தான்.. வினைச்சொல் இல்லை. அங்கே இரண்டாம் வேற்றுமையும்(வை) இல்லை..:)
என்னவோ போங்க.. நீங்களாச்சு நமீதாவாச்சு..


படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லை என்றுதான் நினைத்தேன்!
நம்ம தமிழ் டீச்சர் தெளிவா சொல்லீட்டாங்க!

//நமீதா படத்தைப் போட்டுட்டு... இடி//

பதிவு முழுக்க நல்லா ஜாலி காமெடியா இருக்கு!


//உள்குத்து, வெளிக்குத்து பதிவா படிச்சி ரொம்ப குழம்பிப் போயிருக்கீங்க ஏஜென்ட்!! இந்த இடி, வினையின் காரணமாக வந்த பெயர்ச்சொல் தான்.. வினைச்சொல் இல்லை. அங்கே இரண்டாம் வேற்றுமையும்(வை) இல்லை..:)
என்னவோ போங்க.. நீங்களாச்சு //

புதரகம் போயும் உங்க தொல்லை தாங்க முடியலியே!


//குட்டை குழ(ப்)ம்பினால் தான், தெளிவு கிடைக்கும் என்று சொல்வார்கள்!//

குழப்பம் ஏற்படும் இடத்தில் நம்ம குமரன் வந்துவிடுவார். தெளியவைக்க!


PKS, நன்றி!

'சித்தகுரு'-ங்கறீரு, ஆனா மத்தவிங்க என்னய 'சித்தங்கலங்கிய குரு' ங்கறாய்ங்க!

:-)


//பதிவு முழுக்க நல்லா ஜாலி// - சிபி

நமீதா படத்த போட்டா ஜாலி இல்லாம வேற எப்டி ஓய் இருக்குங்கறேன்!
;-)

//குழப்பம் ஏற்படும் இடத்தில் நம்ம குமரன் வந்துவிடுவார்//

நாங் கேட்டதென்னவோ "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" அப்டீன்னு; ஆனா நீர் சொல்றீரு குழப்பம் இருக்கும் இடமெல்லாம்னு குமரன் வருவார்-ன்னு!

:-)))


வரப்போகும் புயலுக்கு அபாய அறிவிப்பு கொடுத்தாச்சு!

மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கவும்னு வேற எச்சரிக்கையும் பண்ணியாச்சு!

அப்புறம் என்ன! சுனாமிதான்!


//அப்புறம் என்ன! சுனாமிதான்// - SK

அது எப்ப வரும்னு தோராயமா சொல்லமுடியுங்களா, நாங்கல்லாம் பொழச்சிப்போம்ல!!

;-)


//அது எப்ப வரும்னு தோராயமா சொல்லமுடியுங்களா, நாங்கல்லாம் பொழச்சிப்போம்ல!!//

வந்து கொண்டே இருக்கிறது!
உடனே கண்காணா இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்!!

//""எரிந்து விழும்"" "நச்சத்திரத்தை" பார்க்கவேண்டாம்; ஞாபக சக்தி குறைந்துவிடும் என்பார்கள்;//

எப்படி அய்யா, இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்!!


//எப்படி அய்யா, இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்!! // - SK

வலைப்பதிவுக்கு தொண்டாற்ற வேண்டுமே என்ற பேராசை என் உள்ளக்கிடங்கில் எப்போதுமே இல்லாமலிருந்ததில்லை! அந்தப் பேராசை அவ்வப்போது இப்படி எழுத்தின் வழியே வலையுலகை எட்டிப் பார்த்து விடுகிறது!! எதோ என்னாலான சேவை!!!

:-)


ஞான்ஸ் அவர்களின் மேற்படி வலைப்பதிவைக் கண்டு ஒன்னும் புரியாமல் தலையில் உள்ள ஒன்றிரண்டு முடிகளையும் பிய்த்துக் கொண்டு திரியும் சகலமான சக(வலை)ல பாடிகளுக்கும் இந்த ஆனந்தக் கோனாரின் எளிய விளக்க உரை ஒன்று:


படத்தில இருக்கிறது யாரு ? நம்ம நமீதா அக்கா. நம்ம நமீதா அக்க என்ன வச்சிருக்காங்க? கனி வச்சிருக்காங்க, பழம் வச்சிருக்காங்க. அட, கையில அவங்க வச்சிருக்கிறத பாருங்க ஐயா, அந்தக் கனிய சொல்றேன். நல்லா பாத்துக் கிட்டீங்களா? இப்ப நம்ப ஜேம்ஸ்பாண்டு ஞான்ஸ் என்ன சொல்றாரு, நமீதா படத்தப் போட்டு புயல் மள, சுநாமி எல்லாம் வரப் போவுதுன்றாரு? அழகான நமீதா, கவர்ச்சிக் கன்னி நமீதாவப் பார்த்தா புயல் மின்னல் எல்லாம் ஏன் வரணும்? அங்க சொல்ல வந்த விசயத்த நம்ம ஞான்ஸ் சூட்சுமமா, உள்குத்தா, மறை பொருளா, மர்மமா, பூடகமா உணர்த்துறாரு. அவர் என்ன சொல்ல வருறாருன்னு அவரே சொல்ல மாட்டாரு, புரியாதவங்களுக்குத்தான் இந்த கோனார் நோட்ஸ் புரியுதா?

இப்ப கோனார் நோட்ஸ மேலப் படியுங்க.

மதி போன்ற அழகிய முகம் உடைய கவர்ச்சிக் கன்னி நமீதா, தனது கவர்ச்சியாலும் தந்திரத்தாலும் இடி மழை மின்னல் ஏற்படுத்தும் மாயா மோகினி தன் கனிகளைக் காட்டி, (அட! அவர் கையில் உள்ள கனிகளைக் காட்டிங்க), இளம் வஞ்சகர்களை மயக்கி, பழத்தைக் காட்டி பாலகர்களை மயக்கி, தமிழ் மணத்துல ஆட்டம் போட வச்சுட்டாங்க, ஆகையால் நமீதாவின் பழங்கள் தமிழில் ஏற்படுத்திய நாற்றத்தால் (நாற்றம் என்றால் தமிழில் மணம் என்று அர்த்தம்) புயல், மின்னல், இடி, சுனாமி எல்லாம் ஏற்படப் போகிறது என்று ஏஜண்ட் ஞான்ஸ் அவர்கள் குறிப்பால் உணர்த்துகிறார்கள். இதுவே அவரது படமும் பதிவும் தரும் முன் எச்சரிக்கையான தீர்க்கதரிசனமான செய்தியாகும். இப்ப மக்ககாள்ஸ் எல்லோருக்கும் நல்லா புரிஞ்சிருக்குமே, யாருக்காவது புரியலனா சொல்லுங்க, இந்த ஆனந்தக் கோனாரு வந்து மேலும் விலாவாரியா விளக்கிச் சொல்லுவாரு, கோனார் நோட்ஸ¤க்கே கோனார் நோட்ஸ் போட்டு, ரிகர்ஸிவ் ப்ரோகிராம் மாதிரி விளக்கிச் சொல்லுவாரு.

ஞான்ஸ்ஸ¤க்கு எச்சரிக்கை: இந்தப் பின்னூட்டம் மட்டுறத்தப் பட்டால் இன்னுமொரு இடி மின்னல் மழை மோகினி எல்லாம் வரும் :))

பேக்கிரவுண்டில் வடிவேலு ஸ்டையிலில் ஞான்ஸ் புலம்புவது டி டி எஸ் சவுண்டு எ·பக்டில் கேக்கிறது: 'வச்சுட்டாய்ங்கையா ஆப்பு வச்சுட்டாய்ங்கையா'

Kones


**

// விரைவில் சூறாவளி சுற்றியடிக்கலாம்!!

எல்லாம் உங்களின் விருப்பபடியே நடக்கும்.

// பழமுதிர் சோலை

நிறையின்றி குறையொன்றும் இல்ல **

// 'சித்தங்கலங்கிய குரு' ங்கறாய்ங்க!

போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவார் தூற்றட்டும்.. எல்லாம் கண்ணனுக்கே ந்னு உங்களுக்கு நான் நினைவு படுத்தலாமா **

கலக்க போவது யாரு ? .. கலங்கி நிப்பது யாரு ? அட தேவுடா..

//எதோ என்னாலான சேவை!!!

தன்யனானேன் **

இப்படிக்கு
'அமுக்கி' வாசிக்கும் கார்த்திக் - உங்களின் விருப்பபடி

பின்குறிப்பு எப்பவும் உங்கள கூப்பிடுற மாதிரி சொல்ல முடியாததால அங்க எல்லாம் ** போட்டு இருக்கேன்.


அனானி, நீர் வாழ்க!

கார்த்திக் வாழ்க!

:-)


Post a comment Home Index