ஏதோ ஒரு போதையில்...
கருநீல வானத்தில் மிதக்கும் வெண்பஞ்சு மேகக் கூட்டத்தைக் கலைத்திடும் விதமாய் வீசிடும் கீழ்க்காற்று.
இருளை மெல்ல விளக்கித் தள்ள நினைக்கும் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் வந்து அறியாமல் மடிந்து போகும் விட்டில் பூச்சிகள்.
எங்கோ உதிர்ந்த சருகுகளைக் கடத்தி வந்தது காற்று; இங்கே கிடக்கின்றன.
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் எரிச்சலால் நீர்க்குட்டையில் விழுந்து திளைத்திருக்கும் எருமைக் கூட்டம்.
கட்டுப்பாடு ஏதுமின்றி மலருக்கு மலர் தாவி தேன் உண்டு மயங்கிக் கிடக்கும் வண்டுகள்.
கடலுக்கு யார் வந்தாலும் வராவிட்டாலும் கரைக்கு வந்துவிட்டு போகும் அலைகள்.
என்னோட பாணியில்தான் (என்கிட்ட இருந்து) பின்னூட்டம் வரும். பரவாயில்லையா?
Posted by நாமக்கல் சிபி | Fri Jun 09, 12:25:00 am (IST)
ஆறும் அருமையான சிறுகதைகள்.
பாராட்டுக்கள்.
Posted by நாமக்கல் சிபி | Fri Jun 09, 12:52:00 am (IST)
ஒரு புரோபெசனரி போஸ்ட்!
http://pithatralgal.blogspot.com/2006/06/100.html
Posted by நாமக்கல் சிபி | Fri Jun 09, 01:21:00 am (IST)
இன்னொரு புரோபேசினரி பதிவு
Posted by நாமக்கல் சிபி | Fri Jun 09, 09:00:00 am (IST)
கடைசி வரிகள் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
எனக்கு மட்டும் கிடைத்தது!
அனுப்பியிருக்கிறேன்.
சேர்த்துக் கொள்ளுங்கள்!!
"இவர்கள்தான் தமிழ்மணப் பதிவாளர்கள்!"
பி.கு. அந்த இரண்டாவது வரியில் 'விலக்கி' என்று இருந்திருக்க வேண்டுமோ? 'விளக்கி' என்று இருக்கிறது.
இல்லை, அதிலும் ஏதேனும் உட்பொருள் உன்டோ?? !!!
Posted by VSK | Fri Jun 09, 11:57:00 am (IST)