29 November 2005 

கேப்பை

முருங்கைக் கீரை செய்திருந்தாள்; பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை எல்லாமே பச்சை நிறத்தில்! கூடுமானவரை பிரித்து எடுத்து சாப்பிட்டேன்; இருந்த போதும் ஒரு பச்சை மிளகாய்த் துண்டு கடிபட்டது; கண்கலங்கி தும்மல் வந்தது.

ஆபீஸில் 'வேக்யூம்' spelling கேட்கப்பட்டது; சிலர் Vacuum என்றும் மற்றும் சிலர் Vaccum என்றும் சொன்னார்கள்; Dictionary பார்த்து VACUUM தான் சரி என்று அறியப்பட்டது.

கேப்பை மாவு வாங்கி வந்தேன்; தண்ணீரில் சிறிது மாவைக் கரைத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்தேன். கொதிக்கும் தண்ணீரில் மாவு கரைத்த மாவை ஊற்றி கிண்டினேன்; சிறிது நேரத்தில் இறக்கி வைத்தேன்; இறக்கும் போது கையை சுட்டுக் கொண்டேன். சிறிது கேப்பைக் களியை தட்டில் போட்டுக் கொண்டு, குழி செய்து நல்லெண்ணை ஊற்றி உடைத்த மண்டை வெல்லத்தைப் போட்டு சூடாக இருந்தபோதே கொஞ்சம் சாப்பிட்டேன். மீதி இருந்த கேப்பைக் களியை மோரில் உருட்டிப் போட்டேன்; மறுநாள் கேப்பைக் கூழ் பிசைந்து, சின்ன வெங்காயம் கடித்துக் கொண்டு சாப்பிட்டேன்; சாப்பிட்ட அன்று இரவே தும்மல் கொஞ்சம் அதிகம் வந்தது; மறுநாள் சளி நிறைய பிடித்துக் கொண்டது; அவள் சொன்னாள், "கேப்பை ரொம்ப குளிர்ச்சி, கூடவே வெங்காயம், மோர்; எல்லாமே குளிர்ச்சி; ஒங்க ஒடம்பு சூட்டு ஒடம்பு; அதான் ஒத்துக்கல; இனிமே இந்த கேப்ப, கீப்ப செஞ்சீங்க...". அதற்கப்புறம் கேப்பை செய்வதில்லை. ஆனாலும் இந்த அனுபவமே போதும், இந்த ஜென்மம் முழுவதுக்கும்!

Image hosted by Photobucket.com



| | | | | |

18 November 2005 

நெஞ்சு நிமிர்த்திச் சொல்!

Ayez toujours le courage de dire ce que vous pensez அப்டீன்னு பிரெஞ்ச் பாஷைல இதுங்க பேசிக்கறத இந்த (http://translation2.paralink.com) எடத்துல போயி மொழிமாற்றம் செஞ்சு படிச்சேன்.

Image hosted by Photobucket.com

அடக்கடவுளே :-(

----------------------------

சோதனை பதிவு-3 இனி கெடயாது! ஏன்னா,அந்தப்பதிவே இப்ப அர்த்தமற்றுக் காட்சியளிக்குது!! (வார்த்தைப் பிரயோக உதவி: ஆழக்குத்தெழுத்துச் சித்தன்!)



| | | | | |

06 November 2005 

சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல்

மிகுந்த வேலைப் பளுவுக்கு மத்தியிலும், இந்த எனது வலைப்பூவை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் களப் பணியில் ஈடுபட்டு எத்தனை முறை மேம்படுத்தல் செய்தபோதும் என்னவோ எதோ ஒரு திருப்தியில்லாத தன்மையையே நான் உணர்ந்திருக்கிறேன். அது என் குறையா இல்லை நிறையா என்பதையும் அவ்வப்போது மூளையின் ஒரு மூலையில் ஓரம்கட்டி வைத்து சிந்தித்தே வந்திருந்திருக்கிறேன்; இனியும் செய்வேன் என்பதில் ஐயப்பாடு எழுவதற்கான சாத்தியக்கூறுகளைக் களைந்தே செயல்படுத்தி வருவேன் என்ற உறுதிப்பாட்டு நிலைப்பாடு என் மனதின் மத்தியிலும் பயிர் செய்யப்பட்டு அவ்வப்போது ஊக்க உரம் போட்டும் அடிக்கடித் தீவிர தன்னார்வத் தண்ணீர்ப் பாசனம் கொண்டும் களப்பணி ஆற்றி வருவதால் விரைவில் மேம்படுத்தப்பட்ட அறுவடை நிச்சயம் உண்டு என்றே எதிர்பார்க்கிறேன்; அதே சமயம் எதையும், எந்தச் சூழ்நிலையையும் எதிகொள்ளும் மனோதிடமும் பக்குவமும் எனக்குண்டு என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை, ஐயமில்லை, ஐயமில்லை.


Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com



கடவுளே காப்பாத்து.


| | | | | | |

02 November 2005 

சோதனை - ஒன்று

திர்கொண்டுள்ள

சில தொழில்நுட்பச் சிக்கல்களைக்

களையும் பணியில் ஈடுபட்டிருப்பதால்

இந்த சோதனைப் பதிவு-1.


Image hosted by Photobucket.com