« Index | Home | ஸம்போ... ஸிவஸம்போ... » | பொங்கல் » | பட்டை » | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » | 2006 » | வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி » | லிட்டர் » | நத்திங் ராங் எபெளட் தட்... » 

26 January 2006 

குதம்பைச் சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5


நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15


சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20


அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30


தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

-------------------------
Source: http://www.infitt.org/pmadurai/mp076.html#s4

தற்போது தமிழ் வலைப்பதிவுகளில் நடக்கும் இலக்கியச் சர்ச்சைக்கும் இந்தப் பதிவுக்கும் நேரடியான சம்பந்தம் கிடையாது!

கற்பனைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!


கொஞ்சம் விளக்கமும் கொடுத்திருக்கலாம் அல்லவா.
குதம்பைச்சித்தர் பாடல்கள் நன்றாக உள்ளது


தேடிக் கொண்டிருக்கிறேன், விளக்கங்கள் கிடைத்தவுடன் இங்கே பதிய முயற்சி செய்கிறேன்.
உங்களுக்குக் கிடைத்தாலும் கொடுத்து உதவுங்கள். நன்றி.


என் பதிவிலிருந்து அப்பட்ட காப்பியடித்திருந்தாலும் முழுமையாய் வெளியிட்டதற்கு நன்றி நன்றி நன்றி!!!! :)))

விளக்கங்கள் சித்தனின் பதிவில் இருக்கின்றன.


விளக்கம் இங்கே http://chiththan.blogspot.com/2005/09/7-1.html

Thanks Rams, Chiththan, Ennar.


ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்த அந்த ஆண் குழந்தை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. கருகரு என்ற விழிகள். சுருள்சுருளான கரிய தலை முடி. தாய்க்கு கொள்ளை கொள்ளையாய் ஆசை.
சீவிச் சிங்காரித்து பொட்டிட்டு மையும் இட்டு காதுகளில் குதம்பை பூட்டி பெண்ணைப் போல் அலங்கரித்துப் பார்த்துப் பார்த்துப் பூரிப்பாள். "ஐயோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே" என்று சொடுக் கிடுவாள்.
குழுந்தையைப் பார்ப்பவர்களுக்கு அதன் காதுகளில் அணிந்துள்ள குதம்பைதான் பளிச்சென்று தெரியும். அதனால் குதம்பை என்பதே அவருக்கு பெயராகிவிட்டது.
அவர் தன்மையே முதன்மைப்படுத்தியே பாடிக் கொண்டார்.
குதம்பை = அந்த காலங்களில் பெண்கள் காது குத்தி அதில் பூச்சிக் கூடு தண்டட்டி, நாகபடம், இவைகளை அணிவர் அதற்காக அந்த காது துவாரத்தை பெயரிதாக ஆக்க ஓலைச் சுருளை வைத்து வைத்து பெரியதா ஆக்கிக் கொள்வார்கள் இங்கு நமது சித்தருக்கு எதை வைத்தார்கள் என பாதிவாளர் தான் சொல்லவேண்டும்


//...பாதிவாளர் தான் சொல்லவேண்டும் //-Ennar

யாருங்க அது பாதிவாளர்?!
;-)


இதை யெல்லாம் காணலாமா? பிழை பொருத்தருள்க டைப்பும் போது விரல் எங்கோபோய்விடுகிறது. என் கேள்விக்கென்ன பதில்? வடை எண்ணச் சொன்ன பொத்தலை எண்ணுகிறீர்களே.


Ennar,

ஒரு வடைக்கு ஒரு பொத்தல்தானே!

So,

number of பொத்தல் = number of வடை !

:-)
=========

அப்பம் தின்னாப் போறே, குழி எண்ணனுமோ? அப்டீன்னு மலயாளத்துல சொல்வாங்கன்னு நெனக்கிறேன்! சரியா?

;-)


testing the comment moderation option.

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.



- NJ


testing the comment moderation option.

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.



- NJ


my new ID Agent 8860336 ஞான்ஸ்

- NJ


அடேங்கப்பா... இலக்கியப் பதிவு போடுறீரோ!


அது,"அப்பம் தின்னவோ? அலால், குழி எண்ணவோ?"

மனோன்மனியத்தில் வருகிறது.


//மனோன்மனியத்தில் வருகிறது. //

நன்றி.

கொஞ்சம் விளக்கம்...


அப்பம் தின்னச் சொன்னால், அதைவிட்டு துளையை எண்ணவேண்டாம்.

அதவது சுட்டும் பொருளைவிட்டு சுட்டும் விரலை நோக்காதீர்கள்.


//அதவது சுட்டும் பொருளைவிட்டு சுட்டும் விரலை நோக்காதீர்கள். //


நன்றி.


நன்றி ஞானம் சார்


Post a comment Home Index