31 May 2006 

பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info

வலைப்பதிவர் பெயர்: Agent 8860336 ஞான்ஸ் (NJ)

வலைப்பூ பெயர் : ஞானபீடம்

சுட்டி(url) : http://njanapidam.blogspot.com

ஊர்: யாதும் ஊரே! (யார் கேட்டாலும் ஏஜெண்ட்கள் சொல்லக்கூடது என்ற விதி உள்ளது!)

நாடு: 'உலகமே உள்ளங்கையில்' So, நான் என்னோட உள்ளங்கைல தானே இருக்கனும்!

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: Blogger

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 19 March 2005

இது எத்தனையாவது பதிவு: 128 (Bit-க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னா, எல்லா பதிவுமே பிட் அடிச்சதுதான் )

இப்பதிவின் சுட்டி(url):
http://njanapidam.blogspot.com/2006/06/nj-info.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இலக்கிய உப்புமா செய்ய!

சந்தித்த அனுபவங்கள்: அது வெஜிடபிள் பிரியாணி மாதிரி, எல்லாம் கலந்தது!

பெற்ற நண்பர்கள்: எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது!

கற்றவை : Its a small world

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : டிஸ்கி+ஸ்மைலி போட்டுட்டு நெறய எழுதலாம்!

இனி செய்ய நினைப்பவை : இலக்கிய உப்புமாவோடு, கேசரி மற்றும் அல்வா...!!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு : 6 அடிக்கு 1 இன்ச் உசரம் கம்மி, ஒடிசலான தேகம், வலது கை பழக்கம்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாரீர்... வாரீர், ஞானபீடம் வலைப்பதிவுக்கு வாரீர்!!

30 May 2006 

பாவம் செய்தால் காதல்

Photobucket - Video and Image Hosting

காதல் செய்தால் பாவமான்னு கேட்ருக்காங்க!
சிலர், ஆமா பாவந்தான்... செய்யாதே காதல்னு பயமுறுத்திருக்காங்க!


நரகம்னா
கொதிக்கற எண்ணெய் கொப்பரையில போட்டு பொறிக்கறது,
நெருப்பில் போட்டு வாட்றது,
ஈயத்தக் காச்சி ஊத்தறது,
இப்டி இன்னும் கொடூரமா தண்டனைன்னு ரொம்ப பீலா உட்ருக்காங்க!

ஒருத்தன்,
காதல் செஞ்சு....
அவ பின்னாலயே அல்சேஷனா அலஞ்சு...
பர்ஸ் கிழிஞ்சி...
சோறு தண்ணி மறந்து...
தாடி வளத்துட்டு...
ஜோல்னா பை...
தண்ணி! பாட்டில்...
பைரவன்...
பேப்பர், பேனா...
வச்சிக்கிட்டு...
இப்போ பொலம்பிட்டுருக்கான்...

பாவம் செய்தால் காதல்

=== *** === *** === *** ===

The hearts is in the center of the chest.
But it beats at the left side.
I guess that's the reason why..
The heart isn't always right..

=== *** === *** === *** ===

 

கடலைத் தேடும் நதிகள்

Photobucket - Video and Image Hosting

ஜனனம்
மலையிலா
இல்லை மழையிலா

நீர்
வீழ்ச்சியா
இல்லை பாய்ச்சலா

மண்ணில்
மரணமா
இல்லை நடனமா

கடலில்
கலப்பதா
இல்லை விதைப்பதா

விழுவதும் நீர்
எழுவதும் நீர்
வாழ்வது மட்டும் யாம்

 

துரோகி...

காட்டிக் கொடுத்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

காட்டிக் கொடுத்தான் துரோகி.

29 May 2006 

து... து... து... :-)


 


 


 



 


xxx


அது...

இது...

வருகுது...

போகுது...

நிக்குது...

நடக்குது...

சாயுது...

தேயுது...

விழுகுது...

எழுகுது...

வாங்குது...

விக்குது...

சிரிக்குது...

அழுகுது...

கத்துது...

பொலம்புது...

சுத்துது...

சுழலுது...

கிறுக்குது...

அழிக்குது...

மயங்குது...

தயங்குது...

கசங்குது...

குலுங்குது...

எடுக்குது...

போடுது...

தேடுது...

பாக்குது...

முழிக்குது...

27 May 2006 

நைல் நதியின் லீலி புஷ்பங்கள்


Photobucket - Video and Image Hosting

வானம் மெலிதாய் தூறல் போட்டது;
சிலீரென தென்றல் வருடியது;
மண் வாசனை நாசியைத் தொட்டது;
உள்ளுக்குள் லேசாய் கதகதப்பு.

அவள் வரக் காத்திருந்தேன்;
பஸ் வராமலிருக்க வேண்டிக் கொண்டேன்;
ரம்யமான தனிமையில்,
எண்ணப் பறவையின் சிறகுகள்
விண்ணில் விரிந்தன.

'அது ஒரு அழகிய நிலாக்காலம்' என்று
தொடுத்த வைத்த வார்த்தைகளால்
எடுத்துப் போட்டு முடித்துவிட முடியாது
அந்த வசந்த கால நினைவுகளை.

ஓங்கி வளர்ந்த ஆலமரத்தின்,
விழுதுகளிலாடும் வாண்டுகள் போலே
குதூகலித்துக் கொண்டாடிய
கல்லூரி தினங்கள்,
பொன்னான கணங்கள்.

பழைய நினைவுகள் பசுமையாய் இன்னும்;
காத்திருப்பது ஒன்றே கடமையென்றானது;
அப்போதும் இப்போதும்.

நதியோரம் காத்திருந்தேன்...
பளீர் என்றொரு மின்னல்
சிரித்த முகமாய் அவள்!

25 May 2006 

புல்+இ = புலி



தண்ணி குடிக்க ஓடைக்குப் போலாமா?

எனக்கு தண்ணி வேண்டாம்!

ஏன்... தாகமா இல்லியா?

இல்ல... இப்பதான் அருகம்புல் ஜூஸ் குடிச்சேன்... அதான்!!

24 May 2006 

வாடி... வாடி... நாட்டுக்கட்ட

Photobucket - Video and Image Hosting

திம்சு கட்டை... ஐ ஐ திம்சு கட்டை... ஐ ஐ
ஏண்டி என்னை... கெடுத்துப்புட்ட?

கூத்து கட்ட.... ஐ ஐ கூத்து கட்ட... ஐ ஐ
எதுக்கு என்னை... சேத்துக்கிட்ட?

பப்பள பள பப்பள பள பப்பாளி பழமே
தத்தள தள தத்தள தள தக்காளி பழமே

கும்தலக்கடி ஜும்தலக்கடி சூடாச்சு மனசே
ஐத்தலக்கடி ஐத்தலக்கடி கெட்டாச்சு மனசே

**** **** ****


கொய்யாக்கா தோப்பு தேடி
கூத்து போட வாடி ரோசவே

பல்லாக்கு போல என்னை
தூக்கி போக வாங்க ராசவே

உன்னால தானே... தள்ளாடுறேனே...
உள்ளூர நானே... திண்டாடுறேனே...
பித்தாகி நானே... மடி மேலே... விழலாமா?

23 May 2006 

பூனைகள் மற்றும் ஆந்தைகள்




1.29 பூனை

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்

பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்

பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!

பூனை வந்தது பூனை!

http://www.infitt.org/pmadurai/mp093.html#dt129

====== ******* ======

The Wise Old Owl

In the still of the night, when the moon is high,
You can hear the owl's cry.
Too-whit-too-woo; too-whit-too-woo,
I wonder who he's calling?

His two big eyes are open wide,
As he nodes his head from side to side,
He looks so wise and oh! so clever,
I'm sure he'll live for ever and ever.

I wonder why he wakes at night,
And disappeares when it is light,
But I'm sure that he knows best,
When it's time for owls to rest.

http://www.4to40.com/poems/index.asp?article=poems_thewiseoldowl

====== ******* ======

22 May 2006 

நாயின் பேர் அப்பாய்



1.28 நாய்

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;

என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போ என்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!

என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்

என்றன் நாயின் பேர் அப்பாய்...

=== *** === *** === *** ===

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "இசை அமுது"

e-text from: http://www.infitt.org/pmadurai/mp093.html

21 May 2006 

வானிலை அறிவிப்பு



மு
தி
ர்


சோ
லை





வானம் மேகமூட்டத்துடனோ அல்லது பறவை கூட்டத்துடனோ காணப்படலாம்!

மெல்லிய தூறலில் ஆரம்பித்து ஆலங்கட்டி மழை வரை பெய்க்கலாம் இல்லாட்டி பொய்க்கலாம்!!

இடி மின்னல் இத்யாதிகள் தோண்றலாம்; தோண்றாமலும் போகலாம்!!!

காற்றுடன் கூடிய பலத்த மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன; தோற்றப் பிழையாகக் கூட இருக்கலாம்!!!!

இடி இடிக்கும் போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று சொன்னால் காது செவிடாகும் வாய்ப்பு இருக்காது என்று சொல்வார்கள்; ஆனால் திறந்த வாய்க்குள் இடி புகுந்து வாய் ரிப்பேர் ஆகலாம்!!

தலைச்சன் பிள்ளை தலையில் இடி இறங்கும் என்று ஊர்ப்பக்கம் சொல்லக் கேள்வி! அப்படி ஏதும் விழுந்தால் கவலைப்படாமல் எடுத்து ஓரமாக குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நடையைக் கட்டவும்! அந்த இடத்திலேயே நிக்க வேண்டாம்; மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கவும்!!

நனையாதே, மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பார்கள்; வெயில் காலத்தில் கூடத்தான் வேர்வைச் சளி பிடிக்கிறது. எல்லாவற்றையும் அனுபவி என்று சொல்வார்கள்; மழை வெயில் காய்ச்சல் தலைவலி எல்லாவற்றையுமே அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

எரிந்து விழும் நச்சத்திரத்தை பார்க்கவேண்டாம்; ஞாபக சக்தி குறைந்துவிடும் என்பார்கள்; ஒருவேளை பார்த்துவிட்டால், ஒன்றும் பிரச்சினை இல்லை; வல்லாரை தூதுவளை போன்ற மூலிகை மருந்துகள் கிடைக்கும், வாங்கிச்சாப்பிட்டு ஞாபக சக்தியைப் பெருக்கிக் கொள்ளலாம்!
மறக்க வேண்டாம், மறதி இறைவன் கொடுத்த வரம்!

19 May 2006 

Arya & Dravid

|.|


ஹலோ... திராவிட் How are you?

ஹாய்... ஆர்யா, I'm Fine; How is going?

ம்... அப்டியே போகுது!

ரொம்ப பிஸியாயிட்டிருக்கீங்க போல...

ஆமா... ரெண்டு மூனு படம் ஹிட் கொடுத்தப்புறம்... வரிசைல நிக்கிறாங்க producers!

இங்கயும் அப்டிதான்... ஆடுற வரைக்கும் பேட்ஸ்மேன்; ஆடலேன்ன பேட்மேன் அப்டீம்பாங்க!

ஹாங்... நீங்கதான் இப்ப நல்ல form-ல இருக்கீங்களே.. ஏங் கவலப்படுறீங்க!

இப்ப இருக்கேன்.. இப்டியே இருக்கனுமே... இதுக்குள்ள ஏகப்பட்ட பாலிடிக்ஸ் வேற... எதுனா தொழில்-ல செட்டில் ஆயிடனும் சீக்கிரமா!

எல்லா எடத்துலயும் அப்டிதான்; இப்போல்லாம் field-ல ரொம்ப காலம் தாக்குப்புடிக்க முடியலே! வாங்க... நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு படம் பண்ணலாம்!!

அய்யோ.. ஏற்கெனவே எம்மேல ரொம்ப பொண்ணுங்களுக்கு ஒரு இது! இதுல சினிமாக்கு வந்தேன்னா அவ்ளோதான்... தாங்காது சாமி! நீங்க வர்றீங்களா ஒரு மேட்ச் ஆடிரலாம்! இன்னும் மேல போயிடுவீங்க!!

ஹா... எனக்கு ஆடறது புடிக்கும், ஆனா அது ஒங்க ஆட்டம் இல்ல எங்க சினிமா ஆட்டம்; சும்மா ஜாலியா இருக்கும்!! ஒரு தடவ சூட்டிங் போறப்ப கூட்டிட்டு போறேன் வாங்க!

பாக்கலாம்... OK... see you Arya

Bye Dravid!

18 May 2006 

முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன்



ஓ...

அப்படியா...

பிரமிக்கவைக்கும் ஆற்றல் கலவை...

எழுத்தில் தீ...

எண்ணத்தில் சூறாவளி...

கருத்தில் ஆகாயம்...

ஹாஸ்யத்தில் நீர் பீர் மோர்...

ஆழப்பதிவுகளில் பூகோளம்...

முகமூடி...

மொத்தத்தில் நீ பஞ்(ச்)ச பூதம்!!!!

:-)


related link(s): சகலகலா வல்லவன்

17 May 2006 

ஆரிய, திராவிட...

Key words: தமிழ், வேதம், ஓதுதல், மந்திரம், அர்ச்சனை, சமஸ்க்ருதம், ஆரியம், திராவிடம், ஆத்திகம், நாத்திகம், கடவுள், பக்தி, பிரார்த்தனை

கீழே எழுதப் பட்டுள்ளவைகளில் எந்த அளவு வேதம், மந்திரங்கள், ஆரியம், திராவிடம் பற்றி விரிவாக உள்ளது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாத போதிலும் இணையத்தில் கிடைக்கப் பெற்றவை இவை.

Photobucket - Video and Image Hosting
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்களம் இங்கே தொடங்கட்டுமே

- செல்லமே

***** === ***** === *****


கண்ணுக்குள் நூறு நிலவா... இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்... எழுதிய உறவா
நாணம் விடவில்லை... தொடவில்லை...
ஏனோ விடை இன்னும் வரவில்லை...
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில் தான்
வார்த்தை வருமா

- வேதம் புதிது

***** === ***** === *****

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொன்னேனே - அதன்
பொருளை சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே (மந்திரம்)

காதல் வேதம் கற்பிக்கவா
காதில் வந்து ஒப்பிக்கவா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னை தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா...
காதல்தானே ஜெயித்தது...

மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் - பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
ஆற்று மணலில் பேரை எழுதி
அழகு பார்போம் அன்பே வா

- வேதம் புதிது

***** === ***** === *****

About me





Tamil Blogs Portal - தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Technorati Blog Finder

Powered by Blogger
Creative Commons License
This work is licensed.
Powered by Blogger
and Blogger Templates