31 January 2006 

இரண்டு காதல் கடிதங்கள்

இரண்டு காதல் கடிதங்கள்


எழுதியவர்கள்: வாலி, வைரமுத்து
Image hosting by Photobucket

============
film-குழந்தையும் தெய்வமும்
song-anbulla maan
lyrics-வாலி
singers-tms,ps
music-msv


அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
நலம் நலம் தான முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்ன வென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
நலம் நலம் தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தள்ர்ந்தது நாணம் அல்லவா
வண்ண பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்

=========
song: kaadhal kadidham theettavae
voice: unni maenan, S jaanaki
lyrics: வைரமுத்து
movie: ஜோடி

ம்ம்...ம்ம்ம்...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச்
செத்துப் போகின்றேன்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணொடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ... வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்த்திடும்

30 January 2006 

ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும் - circus

ஒரு சர்க்கஸ் கூடாரமும் சில கோமாளிகளும்!

சொல்வதற்கு ஒன்றுமில்லை!

எல்லாம் இங்கே! All just down here!!

Image hosting by Photobucket

Image hosting by Photobucket



Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket

Image hosting by Photobucket


as usual, no relations ;-)

29 January 2006 

காப்பி - coffee


காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

- புரட்சி கவிஞர் பாரதிதாசனின் இசை அமுது

27 January 2006 

இது அது பற்றியல்ல


நீ காற்று
நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்!!!

எப்போதோ கேட்ட பாடல் ஒன்று
No relations!!
;-)

 

காதலின் திருவிழா - Rain

சற்று இறுக்கம் தளர்த்தக் கூடும் என்ற எண்ணத்தில் இந்த அருமையான பாடல் இங்கே...


எனக்குப் பிடித்த பாடல் அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா ?

(எனக்கு)

மெல்ல நெருங்கிடும்போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு)

வெள்ளிக் கம்பிகளைப் போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீர் தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து களைகிறாய்

film : Julie Ganapathy
singer : ShreyA ghosal / Vijay Yesudass
music : IlayaRaja

இந்தப் பாடலைக் கேட்க இங்கே செல்லவும்!

26 January 2006 

கிண்ணத்தில் வீசிய புயல்

Image hosting by Photobucket

இது சரிப்பட்டு வருமா?

எவ்ளோ நாளுக்கு இப்டி இருக்குறது?

ஒரு துடிப்பு / இண்ட்ரஸ்ட்டே இல்லாம போயிடுமே! ஆறுன கஞ்சி பழங்கஞ்சி மாதிரி போயிடுமே!

இப்பத்தான் சின்னதா சந்தோஷம் வந்துச்சு, அதுக்குள்ள வேற ஒரு பிரச்சன ஆரம்பமாயிடுச்...சே!!

இது எங்க போயி முடியுமோ?

ஏன் இப்படி? எதற்காக? எதைச் சாதிப்பதற்கக இப்படி?

இதுக்கு தவச தானியத்த படியளக்குறதா இல்ல கசையடி குடுக்கறதா?

ஹும்... எல்லாம் காலணா திவச தம்படி பெறாத விஷயங்கள்.. என்னத்த சொல்ல !

ரொம்ப கடுப்பா இருக்குது; எரிச்சல் எரிச்சலா வருது.

இதத் தவுத்து வேற பொழப்பே பாக்க முடியாத நெலமக்கி போயிடும் போல இருக்கு!

நிறுத்தனும்; எல்லாத்தயும் நிறுத்தனும்; அப்பத்தான் சரிப்படும்-உருப்படும்!

 

குதம்பைச் சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5


நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15


சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20


அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30


தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

-------------------------
Source: http://www.infitt.org/pmadurai/mp076.html#s4

23 January 2006 

ஸம்போ... ஸிவஸம்போ...

 

ஸம்பொ ஸிவஸம்பொ ஸிவஸம்பொ ஸிவஸம்பொ

ஜகமே தன்திரம் சுகமே மன்திரம்
மனிதன் யன்திரம் ஸிவஸம்பொ
நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை
தினமும் நாடகம் ஸிவஸம்பொ

மனிதா உன் ஜென்மட்தில் என்னளும் நன்னாளாம்
பதினாரு எண்ணதே, என்னளும் பொன்னாளாம்
பல்லாக்கை தூக்காதெ, பல்லாக்கில் நீயேரு
உன்னாயுள் தொண்ணோரு, என்னளும் பதினாரு
..டும்டும்..ஜகமெ..

அப்பாவும் தாட்தாவும் வன்தார்கள் போனார்கள்
தப்பெனா ஸரியென்ன எப்போதும் விளயாடு
அப்பாவி என்பார்கல் தப்பாக நினைக்காதெ
எப்பாதை போனாலும் இன்பட்தை தள்ளாதெ
கல்லை நீ தின்ராலும் ஜரிக்கின்ர நாளின்ரு
காலங்கள் போனாலோ தின்ராதெ என்பார்கள்
அ.மதுவுன்டு தேனுன்டு சுகமுன்டு மனமுன்டு
மனம் கொன்டு வன்தாலே ஸொர்கட்தில் இடமுன்டு
..டும்..ஜகமெ..

12 January 2006 

பொங்கல்

Image hosted by Photobucket.com

அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் + வெண்பொங்கல் வாழ்த்துக்கள்.

11 January 2006 

பட்டை

ஹூம்... மக்கள் எல்லாம் பட்டை அடிக்கறதுல ரொம்ப மும்மரமா இருக்காங்கன்னு நெனக்கிறேன்; எனக்கு அப்டி பட்டையடிக்க இப்போதக்கி இஷ்டமில்ல; அது கொஞ்சம் பேஜாராப் படுது; பட்டை அடிச்சா என்னோட total look-க்கு ஒரு 'இதுவா' இல்ல!

அந்தப் பட்டை எனக்குப் புடிக்கல.

இது வெறும் பீடமல்ல ஞானத்தங்கமே ;-)

09 January 2006 

பக்கோடா

Image hosted by Photobucket.com
ஓவியம்
ஓய்ந்திருக்கின்றன
அலைகள்

..... ..... .....

அன்னையர் தினம்
மகளின் செய்தி
அவளுக்கு விவாகரத்தாம்

..... ..... .....

SUNDAY MORNING
ALL THE WAVES IN WHITE
KNEELING ON THE BEACH

..... ..... .....

ஓவியம்
கதிரவன் காயவில்லை
நண்பகலிலும்

..... ..... .....

ZIPPED UP
IN HER JEANS
HIS GENES

--- --- ---

08 January 2006 

யூஸ்லெஸ்

Image hosted by Photobucket.com

ஜன்னலுக்கு வெளியே
கல்மீது தலைசாய்த்து
படுத்திருக்கும் நாய்
நன்றியோடு அவளை நோக்கி
ஈரமான விழிகளோடும்
நடுங்கும் உடலோடும்.

மொட்டை மாடி குளிரில்
மெல்லிய தென்றல் வந்து
வருடும் சுகத்தை மறந்து
அவளையே பார்த்திருக்கும்.

எழுதுகிறாள் ஒரு கடிதம்
பேசுகிறாள் அந்த நாயிடம்
எண்ணுகிறாள் தன் எழுத்தை
அவளும் அப்படித்தானோ?
வைத்தாளே நம்பிக்கை வீணாய்!

05 January 2006 

வலைஞர் சந்திப்பு

கொஞ்ச காலமா இங்கே அடிக்கடி நிகழ்ந்த, நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட, நேரில் நடந்த, போனில் மட்டுமே நடந்த, டெலிபதி முறையில் நடந்த மற்றும் கனவு/கற்பனையிலேயே நடந்த வலைஞர் சந்திப்பு பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருந்தது. இப்போது என்ன காரணமோ ஒன்றும் காணவில்லையே என்று தூக்கமின்றி ஏங்குவோரின் ஏக்கம் போக்க, இதோ ஒரு வலைஞர் சந்திப்பு பற்றிய பதிவு!!

இங்க எல்லாமே ஒரு 'இது'ல தான நடக்குது; அதாவது இந்த புத்தக வெளயாட்டு, பிடிச்ச பதிவு/பதிவர்கள், த(பி)த்துவங்கள், கலாய்க்கிற கவித, சினிமா பாட்டு போடறது... இப்டியா ஒரு 'இது'ல தான நடக்குதுங்கறேன்! இதுல குத்தங்கொற சொல்றதுக்கு ஒன்னுமில்லேங்கறது ஒத்துக்க வேண்டிய மேட்டருதான!

OK coming to the point....

வலைஞர் சந்திப்பு

பொதுவா வலைஞர்கள் சந்திக்கறப்போ, அந்த ஆரம்ப கொஞ்ச நேரம் அறிமுகம் நடக்கும்னாலும், ஆர்டர் செய்யப்போற snacks & drinks வகையறாக்களை எண்ணித் துள்ளாத மனமும் துள்ளும். அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்கிறவர்கள் வந்தால், கொஞ்ச நேரம் அப்டி இப்டியென்று போக்கு காட்டினாலும் பிறகு சுயரூபம் காட்டிவிடுவது இயல்பே!. விவாதிக்கப்படும் விஷயங்களில் அனைவரும் முழு ஈடுபாட்டோடு கருத்துக்களை முன்வைப்பார்கள் என்பதும், ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான அஸ்திவாரம் அங்கே போடப்படும் என்பதும் உலகறிந்த உண்மை!!!


சரி, இங்கே இவர்கள் சந்திக்கிறார்கள்!!!

யார் யார் சந்தித்தார்கள் என்பதை படத்தில் காண்க!

Image hosted by Photobucket.com

About me





Tamil Blogs Portal - தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Technorati Blog Finder

Powered by Blogger
Creative Commons License
This work is licensed.
Powered by Blogger
and Blogger Templates