26 July 2005 

உளவுத்'துரை'

Image hosted by Photobucket.com

1.
கூடிய விரைவில் மத்தியக்கிழக்காசியாவிலிருந்து ஒரு பதிவில் குசும்பு, மாய(ம்) உளவு ஏஜெண்ட் போன்ற வார்த்தைகளைப் பிரதானப்படுத்தி பதிவுகள் வரலாம் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள் என்னிடம் கூறியுள்ளார்கள். ஏற்கனவே ஞானபீடம் மற்றும் முகமூடி பற்றி எழுதப்பட்டுவிட்டதாம்!


2.
'மாய'மானவரை நோக்கி மீண்டும் ஒரு சுனாமி வரலாம் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள், "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்" என்ற ஒரு பாடலைப்பாடி தெரிவிக்கிறார்கள். எனவே 'மாய'மானவர் சற்று அடக்கி வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


3.
mask இட்ட ஒரு பதிவர், சில உபயோகமான தகவல்களை முன்வைத்து உருப்படியான பதிவொன்றை இட்டு அதன் கடைசியில் ஒரு மரண அடி நையாண்டியை எழுதப்போகிறார் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள் 'அமிஞ்சிக்கர-பேரிக்கா' விலிருந்து தெரிவிக்கிறார்கள்.

**** **** **** **** ****
இங்கே மசாலா காலி என்ற ஒருவருக்காக, கீழே சில மசாலாக்கள் !!!

masala hosted by Photobucket.com

25 July 2005 

மீண்டும் ஒரு திருவிளையாடல்

மன்றத்தில் புலம்புகிறார் தருமி..

மயிலையிலும் கயிலையிலும் கோவில் கொண்ட எம்பெருமான் காசிநாதன் அருள்புரிவாரா?


இப்போது நமது அருமைத் தோழர் தருமிக்கு மன்றத்தில் நேர்ந்ததைப் பாருங்கள்:


Posted: Thu Jul 07, 2005 11:15 am
Post subject: 'stars' not working- help needed

hello
when the stars for voting are pressed i get the following message:
Sorry! This blog is not yet listed in thamizmanam.com
may i have the help to get it rectified. i remember it was working earlier.
..........dharumi

==== ==== ==== ==== ====

Posted: Sat Jul 23, 2005 12:26 pm
Post subject: பதில் இல்லா கேள்விக்கு பதில்

என் கேள்விக்கு என்ன பதில் என்று காத்திருந்து பதிலேதும் வராத நிலையில், பின்னூட்டத்தில் பதில் கொடுத்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.

இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது; தீர்க்க உதவாமல் இருந்த அனைவர்க்கும் நன்றி.



original link here



Image hosted by Photobucket.com

24 July 2005 

நாதந் தானது நாரதர் வீணையோ

மாயவரத்தானும் முகமூடியும்...

நாரதன் கலகம் நன்மையில் தான் முடியும்!

நாராயண....

நாராயண....

நாராயண....

முகமூடியின் தீர்க்கதரிசனம் பலிக்க ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணுகிறேன்.

**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****

//கோயிஞ்சாமி, ரொம்ப நாளாச்சிய்யா எல்லாம் ஜாலியா இருந்து... ஆரம்பிக்காதய்யா திருப்பியும்... இந்த ஒரு தபா விட்டுடு, அடுத்த தபா பாத்துக்கலாம் என்ன...// - mugamoodi.

Link: http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_19.html#112184858518978204

**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****

ஆனாலும் ஒரு விஷயம்,

மாயவரத்தானின் சந்திரமுகி கொண்டாட்ட விளம்பரத்திற்கு கண்டணங்கள் எழுந்த அளவிற்கு, முகமூடியின், கஸ்மாலப்பொடி, கருவாடு பொட்டல விளம்பரத்திற்கு ஏன் எதிர்ப்பு எழவில்லை என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

ஒருவேளை, தென்ன மரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டும்-ங்கற மாதிரி, இவருக்குச் சொன்னா அவருக்கும் புரியும்-னு விட்டுட்டாங்களா?

ஹும்... என்னவோ போங்க!

நாரதர் Image hosted by Photobucket.com

நாராயண....

நாராயண....

நாராயண....





தூரத்தில்... எங்கேயோ கேட்கும் குரல்...!

கைது செய்... கைது செய்...

வலைப்பூவில் விளம்பரத்தை ஆரம்பித்து வைத்த

ஞானபீடத்தைக் கைது செய்... கைது செய்...

*** *** *** *** ***
References:
========
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=536#536

http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=568

23 July 2005 

ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே!!!

ஆழ்கடலின் அமைதியாய்...

தெளிந்த நீரோடையாய்...

உலாவும் பூந்தென்றலாய்...

குளிர் நிலவாய்...

வெண்பஞ்சு மேகம்போல்...

தூரத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரமாய்...

** *** **

மாறுகிறது காலம்...

பூணுகிறது போர்க்கோலம்...

வந்துவிட்டது கார்காலம்...

ஆகப்போகிறது அலங்கோலம்...

** *** **

ஓ... ஒரு... தென்றல் புயலாகி வருதே...

ஓ... ஒரு... தெய்வம் படி தாண்டி வருதே...

கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே...

** *** **

Image hosted by Photobucket.com

** *** **

21 July 2005 

மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை!

மன்றத்தில்...

மாயவரத்தானுக்கு...

எச்சரிக்கை!


Original Link here



Image hosted by Photobucket.com

Bigger Picture here!

19 July 2005 

ஒரு பதிவும் பின்னூட்டமும்...

Image hosted by Photobucket.com
திருக்குறள் பதிந்த

வள்ளுவப் பெருந்தகைக்கு

ஒளவையார் இட்ட பின்னூட்டம்:






Image hosted by Photobucket.com
"கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தரித்த குறள்"

16 July 2005 

இது மிஷின் யுகம்

நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே -ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.

போய் உட்கார்ந்தேன்.

"ஸார், என்ன வேண்டும்?"

"என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.

அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.

"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு!" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.

"ஒரு ஐஸ் வாட்டர்!"

"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?"

"இதோ வந்துவிட்டது, ஸார்!" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.

"காப்பி இரண்டு கப்!"

இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.

"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா!"

"இதோ, ஸார்!"

"பில்!"

உடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.

"ஒரு கூல் டிரிங்க்!"

"ஐஸ்கிரீம்!"

பேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.

அதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.

"ஹாட்டாக என்ன இருக்கிறது?"

"குஞ்சாலாடு, பாஸந்தி..."

"ஸேவரியில்?"

கொஞ்சமாவது கவலை வேண்டுமே! அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா? அதற்கு நேரம் எங்கே? அவன் மனிதனா, யந்திரமா?

"ஐஸ் வாட்டர்!"

"ஒரு கிரஷ்!"

"நாலு பிளேட் ஜாங்கிரி!"

கொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.

நான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.

மனதிற்குள் "ராம நீஸமாந மவரு" என்று கீர்த்தனம்! உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா!

திரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.

என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.

"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்!"

அவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.

மனிதன் தான்!

"ஒரு ஐஸ்கிரீம்!"

திரும்பவும் மிஷினாகிவிட்டான்!


****** ******* ****** ******* ****** *******
Image hosted by Photobucket.comBlog பண்ண மேட்டர் ஒன்னும் கெடக்கலேன்னா, செல பெரிய தலங்க படம் காட்டுவாங்க; நாம வெறும் (அறுந்த)வாலு! தானே. அதாங்க, புதுமைப்பித்தன் எழுதுன ஒரு சிறுகதைய திருடி! இங்கே போட்டுட்டேன்.Image hosted by Photobucket.com
****** ******* ****** ******* ****** *******

14 July 2005 

அ... சிங்கமொன்று புறப்பட்டதே... !

Lion hosted by Photobucket.com"தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல
கிண்கிணி அணிந்த கால்களுடன்
பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க
சென்று வா".

- முரசொலியில் கலைஞர் மு.க.


மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி வீட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே



ஏ... சிங்கம் போல
ஏ... சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டன் உதையில தாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ சியான் சியான் சினுக்கு இவனை குத்தூருக்கு அனுப்பு

ஏ புளிய போல
ஏ புளிய போல புளிச்சவண்டா எங்க பேராண்டி
நீ ரசம் வெக்க வேணுமின்னா எடுத்துக்கடா டோய்...
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா கசக்கி புழிஞ்சு போடு...

ஏ சூறாவளி
ஏ சூறவாளி காத்து போல சுழண்டு வறான்டி
அவனை சுத்தி நிற்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏக் கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வச்சு நொறுக்கு டா... டாய்

ஏ ஜல்லிகட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வறான்டி
உங்களை பனமரமா புடுங்கி இப்போ வீச போறாண்டி
ஏய் கும்தலக்கடி கும்மா அடி விட்டாம் பாரு யெம்மா


இந்தப் பாடலை அநேகமாக எல்லாரும் ஏற்கெனவே கேட்டிருப்பீர்கள் என்பதால், இப்போது அதை எங்கேயும் போய்க்
கேட்கவேண்டியதில்லை!

11 July 2005 

நான் ஒரு 'சைக்கோ' வா...

பெண்களைக் கண்டாலே பிடிக்காது;
அவ்வளவு வெறுப்பு பெண்கள்மீது;
பெண்களை மானம் அழித்து, சித்ரவதை செய்து கொல்வதை....
...... ..... ..... ..... ...... .....
...... ..... ..... ..... ...... .....
..... சிகப்பு ரோஜாக்கள்
...... ..... ..... ..... ...... .....

film - சிகப்பு ரோஜாக்கள் (1978)
stars - Kamal Hassan, Sri Devi, Goundamani, Bagayaraj
singer - kamal , sj
music - IR
director - bharathi raja
song - நினைவோ... ஒரு பறவை...
.

இந்த பாடலை இங்கே சென்று கேட்கலாம்.






நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன், அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
வந்தேன், தர வந்தேன்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையொ
அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன், அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான், இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
==== ==== =====
==== ==== =====
singers : MV,S.Janaki
music : IR
மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

ஆடி கண்ணே… அழகு பெண்ண...
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா… அழகு கண்ணா...
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
என்தன் மன்னன் எனை சேர்க்கும் கடல்
இந்தக்கடல் பல கங்கை நதி வந்து
சொந்தம் கொண்டாடும் இடம்
என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
னனனன
அடி என்னடி உனக்கிந்த அவசரம்
னனனாஆ னனனாஆ

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா...
என்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்...
னனனன...
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்...
னனனனனனனனாஆஅ


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

09 July 2005 

பயங்கரத் தொடர் தாக்குதல்கள்

இது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியவில்லை. அதுவும் ஒரே சமயத்தில் நான்கு ஐந்து இடங்களில். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், இப்படிப்பட்ட தாக்குதல்களை சமாளிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை என்றே தோண்றுகிறது. எல்லா உத்திகளும் கையளப்படுகிறது.

பின்ன என்னங்க, நானும் எவ்வளவோ எச்சரிக்கையா இருந்தாலும், என்ற வூட்டுக்காரி அடிக்கிற அடி மரண அடியால்ல இருக்குது! இத சமாளிக்க ஏதுனா ஐடியா குடுங்களேன் பிளீஸ்!!!

வூட்டுக்காரி அடிக்கிற அடி
ஹும்......பகவதீ..... ரட்ஷிக்கனே!!!

08 July 2005 

ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்!

நான் நேத்திக்கி, ஒரு சுட்ட பதிவு போட்டேங்க. ஒடனே இன்னிக்கு என்னடான்னா, நம்ம அப்துல் கலாம், இந்த மேட்டரப்பத்தி பேசியிருக்காருன்னு சன் டி.வி.லயும், thatstamil.com லயும் சொல்றாங்க.

இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா,
எனக்கும், அப்துல் கலாமுக்கும் ஒரே மாதிரி சிந்தனை ஓடுது போல.! இல்லாட்டி, அவரும் ஜோதிடபூமி படிச்சிருக்கலாம்.!!!

அப்டி அப்துல்கலாம் என்ன சொன்னாருன்னு கேக்றீங்களா, இதத் தாங்க சொன்னாரு:

"இளைஞர்களிடம் இப்போது முக்கியமாக இருப்பது பிரச்சினை. பிரச்சினை இல்லாதவர்கள் உலகில் கிடையாது. பிரச்சினைகளை முறியடிக்கும் போது தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்''. (ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.)"

நானும் அதத்தாங்க பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... அப்டீன்னு போட்டேன்!.

இப்ப சொல்லுங்க, என்னோட சிந்தன எப்டி?!?!?!

 

பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்...

பிரச்சனைகள் இல்லாத மக்களே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் உள்ளன.
தீர்க்க முடிந்த பிரச்சனைகள், தீர்க்க முடியாத பிரச்சனைகள் என இரண்டு வகையான பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகளில் 95 விழுக்காடு பிரச்சனைகள் சுலபமாக தீர்த்துவிட முடியும். 5 விழுக்காடு பிரச்சனைகள் மட்டுமே தீர்க்க முடியாது. ஆனாலும் அவற்றையும்
மகான்கள், தெய்வங்கள் நினைத்தால் தீர்த்து வைத்துவிட முடியும். ஆனால் அவ்வாறு அவர்கள் தீர்ப்பார்களா என்பது சந்தேகமே! கோடியில் ஒருவருக்கு வேண்டுமானால் மகான்கள் தீர்த்து வைக்க முன் வருவார்கள். தனிமனித ஒழுக்கம், தூய சரணாகதி இவை இருந்தால் மட்டுமே முடியும்.

பிரச்சனைகள் என்னவென்பதையும், அவற்றை தீர்த்து வைக்கும் முறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் ஜோதிடக்கலையை உருவாக்கினார். எவர் ஒருவர் முறையாக ஜோதிடக்கலையைக் கற்றுக் கொள்கின்றார்களோ அவர்களால் வெகு சுலபமாக
மற்றவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடிகின்றது. இன்றைக்குப் பெரும்பாலான
ஜோதிடர்கள் தன்னைப் பார்க்க வரும் மக்களுக்கு அவர்களது எதிர்கால பலன்களைக் கூறுகின்றார்களேத் தவிர, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை சொல்வதில்லை. காரணத்தையும் நானே சொல்லி விடுகின்றேன்.

ஒருவருடைய கர்மா என்னவென்று ஜாதகத்தில் நன்கு அலசி, அதற்குரிய பரிகாரங்களை எப்படி செய்ய
வேண்டுமென்று தன்னை நாடி வரும் அன்பர்களிடம் சொன்னால் அவர்களது பிரச்சனைகள் சுலபமாகத் தீர்ந்து விடும். ஆனால் பல ஜோதிடர்கள் அவ்வாறு சொல்வதில்லை. காரணம் பரிகாரத்தை சொன்னால் அவர்களது கர்மவினையைத் தாம் அனுபவிக்க வேண்டியதிருக்குமோ என்றே அச்சப்படுகின்றார்கள். ஒருவருக்கு நாம் சொல்லும் பரிகாரத்தால் அவர்களது கர்மவினை நம்மை பாதிப்பதில்லை. ஜோதிடம் பார்க்க வருபவர்களை ஏமாற்றி பணம் பறித்தால்தான்
அவர்களது கர்மா ஜோதிடரைத் தாக்குகின்றது. இதனை ஜோதிடர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே பரிகாரத்தைக் கூறி மக்களது பிரச்சனைகளைப் போக்குகின்றார்கள். அப்படி சேவை செய்யும் அந்த ஜோதிடர்களை தலைவணங்குகின்றேன்.
அவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்க வேண்டுமாய் நான் வணங்கும் சித்தர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்கள் என்ற பெயரில்
மக்களை ஏமாற்றுவதாக பல புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. ஒரு சில ஜோதிடர்கள்
மட்டுமே பரிகாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பெரும்பாலான
ஜோதிடர்கள் பரிகாரம் என்ற பெயரால் ஏமாற்றுவதில்லை. ஆனால் பரிகாரத்திற்கென்று பெரும்
தொகையை வசூலிக்கின்றார்கள் என்ற புகாரும் சில இடங்களில் எழுந்து கொண்டுதானிருக்கிறது. முக்கியமாக கிராமபுறங்களிலும், சிறிய நகரங்களிலும் இவ்வாறு
பரிகாரத்திற்கென்று நிறைய பணம் ஜோதிடர்கள் வாங்குகின்றார்கள் என குரல் எழுப்புகின்றார்கள். ஜோதிடர்கள் தவறு செய்கின்றார்கள் என அவர்களை நான் குறைகூற மாட்டேன். சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே ஜோதிடர்களுக்கு பொருத்தமான சன்மானத்தை வழங்குகின்றார்கள். மற்ற சிறிய நகரங்களில் ஜோதிடம் பார்ப்பதற்கு வெறும்
பத்து ரூபாயோடு வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கின்றார்கள்.

ஒருவருடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டும் ஜோதிட மேதைகளுக்கு வெறும் பத்துரூபாய்
சன்மானம் கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்துவது? பெரிய மருத்துவமனைகளில்
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு பல லட்சங்கள் கட்டணம் வாங்கும்போது, ஒருவரது வாழ்க்கையைக் காப்பாற்ற வழிகாட்டும் ஜோதிடர்களுக்கு வெறும் பத்துரூபாய், நூறுரூபாயோ சன்மானம் அளிப்பது எந்த வகையில் நியாயம்?

எனவேதான் ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்களின் மூலம் கூடுதல் தொகையை வசூலித்து விடுகின்றனர். இந்த தொடரைப் படிக்கும் வாசகர்கள் தங்களது வாழ்க்கைக்கு ஒளிவிளக்கு ஏற்றும் ஜோதிடர்களுக்கு நிறைய சன்மானம் அளித்து அவர்களது மனம் குளிரவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். காரணம் ஜோதிடர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுவர்கள்.


************** **************

நன்றி: பிரச்சனைகளும் அவற்றிற்கு தீர்வும்... Image hosted by Photobucket.com ஜோதிடபூமி, ஜூலை 2005.

06 July 2005 

பதவி படுத்தும் பாடு...

அரசியலில்,
கொள்கை என்பது எங்கள் வேட்டி,
பதவியோ தோளில் போடும் துண்டு;

பதவியெனும் துண்டுக்காக,
கொள்கை எனும் வேட்டியை,
காற்றில் பறக்கவிட்டு விடுவோமா என்றால்....

வேட்டி பறந்தாலும்,
துண்டை கட்டியாவது
மானம் காப்போம்!
எங்களுக்கு துண்டு போதும்!
வேட்டியாவது, மண்ணாவது!!

caution:
- இது ஒரு ஜோக் மட்டுமே!
எந்த ஒரு கட்சியின் கொள்கையிலும்
தலையையோ, மூக்கையோ
நுழைப்பதாகாது!... ஆகாது... ஆகாது!!


Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

 

யாருக்கும் வெட்கமில்லை

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்;

குருடர்கள் உலகில் கண்களிருந்தால் அதுதான் தொல்லையடா;

அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே;

அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை;

எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை.

*********************
படம் : யாருக்கும் வெட்கமில்லை
இசை : V.குமார்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
*********************

ஊருக்கும் வெட்கமில்லை - இந்த
உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை - இதிலே
அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்களிருந்தால்
அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

அத்தனை பழமும் சொத்தைகள் தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே - அந்த
சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை

****** ****** ****** ******

05 July 2005 

சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்...

திரைப்படப் பாடல்களை
ஒரு பதிவாக்கி, அதைக் கேட்பிக்கும்
திருப்பணியில் ஈடுபட்டிருக்கும்
சில/பல வலைப்பதிவர்களின்
ஜோதியில் இணைந்து
கலக்க வருகிறார்
உங்கள் அபிமான
ஞானபீடம்!

***************************
படம்: நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
Singers : SPB, SJ
Music : IR
========

பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமை பூந்தென்றல் ராகம்
இளமை பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா
சிரிக்கிறான் ஹோ ஓஹோ ரசிக்கிறான் ராஜன்
சிவக்கிறாள் ஹோ ஓஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அழைக்கிறான் ஹோ ஓஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஓஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்
பருவமே புதிய பாடல் பாடு
இளமை பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

===========
இந்த பாடலை இங்கே Raaga-வில் சென்று கேட்கலாம்;
(நான் கேட்கவில்லை!)

*********************

Film : Nenjathai kiLLadhey (1980)
Singers : SPB, SJ
Music : IR
Song : paruvamey

Paruvamey pudhiya paadal paadu
Paruvamey pudhiya paadal paadu
iLamai poondhendral raagam
iLamai poondhendral raagam
Paruvamey pudhiya paadal paadu

Poondhotathil hoi kaadhal kaNNama
Poondhotathil hoi kaadhal kaNNama
Sirikiraai ho oho rasikiraan raajan
sivakiraaL ho oho thudikiraaL raani
DheepangaL poalaadum paarvai serum
Paruvamey pudhiya paadal paadu

Thenaadum mullai nenjil ennavoa
Azaikiraan ho oho nadikiraan thozhan
aNaikiraan ho oho thavikirraL thozhi
kaalangaL ponnaga maarum neram
Paruvamey pudhiya paadal paadu
iLamai poondhendral raagam
Paruvamey pudhiya paadal paadu

***************************
பெரிய மனசுக்காரி!

நாமார்க்கும் குடியல்லோம்;
நமனை அஞ்சோம்!


(ஐயோ, என் வுட்டுக்காரி வர்றா,
பாத்தாக்க என்னய பிச்சிருவா,
அப்புறமா எழுதுறேன்!!)

04 July 2005 

சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு!

பொதுவாவே எனக்கு, இந்த மீடியம் & ஸ்மால் ரேஞ்ச் ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு போயி அங்கேயே சாப்டுறதுல அவ்ளோக்கா இஷ்டம் கெடயாது. வேணும்னாக்க பார்சல் எடுத்துக்கிட்டு வீட்டுல போயி சாப்டுவேன். இல்லாட்டி கொஞ்சம் பெரிய எடத்துக்கு போயிடுறது. அதுக்குக் காரணம் சுத்தம் தான். சரியா சுத்தமாக்கமாட்டாங்க. கும்பல் ஜே ஜே-ன்னு எப்பவும் மொச்சுகிட்டே இருக்குறதுனால, சும்மா ஒப்புக்கு தொடக்கிறதோட சரி. அதுவும் கொமட்டுற வாட வேற வரும். செலபோரு சாப்டுட்டு சிகரெட்டு வேற பிடிப்பாங்க. எனக்கு அந்த வாடயே சுத்தமா புடிக்காது. இன்னுங் கொஞ்சம்பேரு இருக்காங்க, சாப்டுட்டு கைய கழுவப்போற எடத்துல வாஷ்பேசின்ல நின்னுகிட்டு ................. எல்லா கண்றாவியும் நடத்துவாய்ங்க. எனக்கு அவிங்கள கொன்னுடலாம்னு தோணும். இதுக்கு அவிங்க பேண்டு சட்ட போட்டு இன்பன்னி, டையி வேற கட்டியிருப்பாய்ங்க. சில ரெஸ்ட்டாரண்டுகள்ல எழுதியே வெச்சுருப்பாய்ங்க: இங்கே தலைசீவவோ ....... துப்பவோ கூடாது அப்டீன்னு. எங்க, அதெயெல்லாம் எவஞ்சட்ட பன்றான். எல்லாம் அவனவனுக்கு காரியம் ஆனா சரி; அடுத்தவய்ங்க ஒக்காந்து சாப்டுறாங்களே, நாம துப்புற சவுண்டு அருவருப்பா அவிங்களுக்கு இருக்குமேன்னு கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாய்ங்க.

Why Bars have car parking?
ஏங் கூட்டாளிங்க செலபேரு, வாட்டர் சர்வீஸ் பண்ரதுக்கு, ஃபாருக்கு போவய்ங்க. நம்பளயும் கூப்டுவாய்ங்க. அந்த எழவு எடத்துக்கு போகவே எனக்கு புடிக்காது. எல்லாம் ஒரே பொகயப்போட்டு நாத்தந்தாங்காது நம்மளுக்கு. எப்டிதாங்... இந்த நாத்தத்துல குடிக்கறாய்ங்களோ தெரியல. ஒருவாட்டி போனப்பதாங் அங்கே ஓவர் பொகபோடுற சமாச்சாரம் தெரிஞ்சது. கைலாசம் மாதிரிதாங் கெடக்குது அந்த எடம்பூராவும். கொஞ்ச நேரத்துலயே, நாங்கெளம்பி வந்துட்டேன். அப்புறமா எந்த ஃபாரு பக்கமும் போவுறது கெடயாது. தண்ணிலயும் நமக்கு அவ்ளோ இன்ரஸ்ட்டு கெடயாது. எப்பனாச்சும், சும்மா லீவு நாள்ல கூட்டாளிக ரூம்ல போயி, ஒன்னா ஒக்காந்து செவன்ஸு, 320 கட்டு போட்டாக்க, அவிங்க சரக்கு அடிப்பாய்ங்க. நானு வெறும் ரெண்டு ஃபோஸ்ட்டர்ஸ் கேன ஊத்துக்கிட்டு கட்டு போடுறதோட சரி. அதும் பக்கத்துல இருக்க கூட்டாளிக ரூமுக்கு பொடி நடயா போற எடத்துல மட்டுந்தாங், ஃபோஸ்ட்டர்ஸ். கொஞ்சம் தூரமா இருக்கவிங்க ரூமுக்கு, போனா வெறும் பெப்சியோட சரி. இல்லாட்டி, நம்ம கெட்ட நேரம், எவனாது வந்து நம்ம வண்டி முன்னால உழுந்தாய்ங்கன்னா, நம்ம மேல எதாச்சும் வாட அடிச்சு, சந்தேகப்பட்டுட்டான்னா, தானாக்காரன் நம்மல சும்மா வுடுவானா? டிரங்க் அண்ட் டிரைவ் கேசுல போட்டுட்டான்னாக்க. அதுனால உஷாரா இருக்குறது நம்ம வழக்கமாப்போச்சு.

Don't dringk & Fly
அப்டி இருந்துங்கூட ஒருநாளு, நாலு பேர வண்டியில போட்டுக்கிட்டு (தனியாப்போயி வண்டி எங்கயாவது மக்கர் பண்ணுச்சுன்னா, தள்றதுக்கோ, இல்லே டயரு மாத்துறதுக்கோ ஆளு வேணும்னு, லாங் டிரிப்லாம் எவனயாச்சும் சும்மாவாச்சும் வண்டியில தூக்கிப்போட்டுக்கறது நம்ம பாலிசி!) கொஞ்சம் தூரம் ஒரு எடத்துக்கு போயி, கட்டு போட்டுகிட்டே, ஒரு நாலு அஞ்சு ஃபோஸ்ட்டர்ஸ உள்ள வுட்டாச்சு. நம்ம ஒடம்புக்கு இது கொஞ்சம் ஓவராப்போச்சு. நம்ம லிமிட்டு மிஞ்சிப்போனா ரெண்டு, ரெண்டர அவ்ளோதான். சரி, தங்கிட்டு விடியகாத்தால போகலாம்னு ரெண்டு பேரு சொன்னாய்ங்க. வேற ரெண்டு பேருக்கு, ராத்திரி எதோ ஜோலி இருக்கு; போயி ஒரு ஆளப்பாக்கனும்னாய்ங்க. சரி, வுடு. லீவு டயந்தானே இப்போ. கொங்சம் டிராபிக் கம்மியா இருக்கற நேரமாப்பாத்து வண்டிய கெளப்பலாம்னு முடிவுபண்ணிட்டு வண்டியக் கெளப்பியாச்சு. ஏ... மெதுவா... பாத்து கொண்டுட்டு போய்யா-னு ரூம்ல இருந்தவிங்களும் சொன்னாய்ங்க. அட வுடுய்யா, நாம என்னா இன்னிக்கி நேத்திக்கா வண்டி ஓட்றோம், பயப்டாதீங்கய்யா-ன்னு சொல்லிப்புட்டு, வண்டிய மெயின்ரோட்டுக்கு கொண்டாந்து, டாப் கியருல போட்டு, பிரஸ்டு டூ த மெட்டல்,

Don't drink & drive
சும்மா அலேக்கா பறக்குது காரு! (அப்பாடா... தலப்பு வந்துருச்சு!)

காருங்கூட பறக்கும்னு எனக்கு அப்ப தெரிஞ்சுது!

ஒருவேள பிரம்மயா இருந்துருக்குமோ?

ஹும்...... அதெல்லாம் ஒரு காலம்!

01 July 2005 

இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே

அலைபாயாதே!

'மனம் ஒரு குரங்கு' என்று சரியாகத்தான் சொன்னார்கள்; ஒரு நிலையில் தங்காமல், எங்கெங்கும் சுற்றி, அலைபாய்வதே அதன் முழுநேரப் பணியாயிருக்கிறது.

'மனோ வேகம், வாயு வேகம்' என்று சும்மாவா சொன்னார்கள். சில நேரங்களில், நான் இப்படிக் கூட எண்ணுவது உண்டு. அதாவது, 'மனம் ஒரு குரங்கு அல்ல; அது ஆயிரம் குரங்குக்குச் சமானம்'. ஏனெனில், ஒரு குரங்கு, ஒரு நேரத்தில், ஒரு கிளை விட்டு, அடுத்த கிளைக்குத் தாவும். ஆனால் மனமோ, ஒரே நேரத்தில் ஓராயிரம் எண்ணங்களால் அலைபாய்கிறதே.

அதனால்தானோ என்னவோ, மனதைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவன், உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரிந்தவன் என்று சொல்லி வைத்தார்கள். சத்தியமான உண்மை அது. மனதை ஒருமுகப்படுத்தத் தானே 'தியானம்' பயிற்றுவிக்கிறார்கள்.

சிந்தனைய ஒருமுகப் படுத்தி, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, சிறிது நேரம் அடக்கி, பிறகு மெதுவாக மெதுவாக, மூச்சை வெளியே விட்டால், சுவாசம் சீரடைகிறது; இரத்த ஓட்டம் சமநிலையடைகிறது. தெளிவான சிந்தனை, ஒளி போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.

இதோ, குளித்து முடித்து விட்டு வந்து, புத்துணர்வோடு அமர்கிறேன்; சிந்தனை ஒரே நிலையில் வைக்கிறேன்; மனதில் எழும் எல்லாவற்றையும், ஒரு பார்வையாளனாக மட்டுமே பார்க்கிறேன்; அவற்றில் என்னை நான் சம்மந்தப் படுத்திக் கொள்ளவில்லை. நான் தனி, என் மனம் தனியாக உணர்கிறேன். ஒரே புள்ளியில் பார்வையை குவிக்கிறேன். பார்வை அங்கேயே நிலை கொள்கிறது. மனமும் பலவித சிந்தனைகளிலிருந்து, ஒவ்வொன்றாக விடுபட்டு, விடுபட்டு தெளிந்த நீரோடை போல சலனமற்றுப் போகிறது. இதோ வந்துவிட்டது. ஆம், அதிகாலை பனி போன்ற வெண்மையில், மல்லிகைப் போன்ற மென்மையில்,
ஆஹா... அற்புதம்;

நான்கு இட்லிகள் !; கூடவே, தேங்காய் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி !. பிரமாதம்;

இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே !. அனுபவி !!!

About me





Tamil Blogs Portal - தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Technorati Blog Finder

Powered by Blogger
Creative Commons License
This work is licensed.
Powered by Blogger
and Blogger Templates