ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது
நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஜெயகாந்தனுக்கு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுகிறது.
ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும், வெண்கலச் சிலையும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளாக அளிக்கப்படுகிறது.
ஞானபீட பரிசைப் பெறும் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன்; இதற்குமுன் 1975ல் சித்திரப்பாவை புதினத்திற்காக தமிழ் எழுத்தாளர் அகிலன் இந்தப் பரிசை வாங்கியிருந்தார்.
புதினங்கள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதுவதை ஜெயகாந்தன் நிறுத்தி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவர் காலடித் தடம் பற்றி பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி புதுமைப்பித்தனுக்கு பிறகு அதிக அளவில் தனது படைப்புகளில் பேசியவர் அவர்தான்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்ற அவர் சுயமாக பலவிஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார், ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.